Saturn Transit 2023: சனியின் மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம், தொட்டது துலங்கும்
Saturn Transit in 2023: சனியின் சுப பார்வை இந்த ராசிகள் மீது பட்டு இவர்கள் இத்தனை நாட்களாக அனுபவித்து வந்த அனைத்து துன்பங்களும் விலகவுள்ளன.
சனி ராசி மாற்றம்: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிதேவன் ஆவார். நல்ல செயல்களைச் செய்பவர்கள் சுப பலன்களையும், தீய செயல்களைச் செய்பவர்கள் அசுப பலன்களையும் பெறுகிறார்கள். சனி பகவானின் அசுப பலன்களிலிருந்து தப்பிக்க, நாம் பல வித பரிகாரங்களை செய்கிறோம். பிரச்சனைகளை கொடுப்பதில் மட்டுமல்ல நல்ல பலன்களை அள்ளிகொடுப்பதிலும் சனி பகவானுக்கு ஈடு இணை இல்லை. சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமை மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. சனியின் ராசி மாற்றம் அல்லது இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.
2023 புத்தாண்டில் சனியின் ராசி மாற்றம்:
இந்து நாட்காட்டியின்படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 அன்று மகர ராசியில் வக்ர நிவர்த்தி பெற்றார். ஜனவரி 17, 2023 வரை, சனி மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தில் இருப்பார். சனி பலவான் வக்ர நிலையில் இருக்கும்போது ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையில் தாக்கத்தில் உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும். ஜனவரி 17, 2023 அன்று, 08.02 நிமிடங்களுக்கு, சனி பகவான் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசியில் நுழைகிறார்.
இந்த ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் சுப பலன்களை தருவார்:
கும்பம்:
2023 ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தை ஆளும் கிரகம் சனி. ஆகையால், கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கும்பம் போல, அபரிமிதமான உச்ச நிலை பலன்களை அளிப்பார்.
மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: திரிகிரஹி யோகத்தினால் சிக்கலில் சிக்கும் ‘4’ ராசிகள்
மிதுனம்:
சனியின் மாற்றத்துடன் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் நடந்துமுடியும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்:
சனியின் மாற்றத்தால் துலா ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மன நிம்மதி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் / மனைவி, குழந்தைகள் இடையே அன்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
மேலும் படிக்க | மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குரு; ‘இந்த’ ராசிகளின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ