கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில்,  வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் மகா சிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். 


இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.


நேரில் பதிவு செய்ய விரும்புவோர், மார்ச் 8 ஆம் தேதி அன்று கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.


மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!


ஈஷாவில் 30-ம் ஆண்டாக சத்குரு முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தோர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.


இந்தியாவின் தலைசிறந்த இசை கலைஞர்கள் சங்கர் மஹாதேவன், குருதாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் திரு. மஹாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் மகாசிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் விழா கோலாகலமாக நடைபெறும்.


மேலும் படிக்க | 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘யோகமான சிவராத்திரி’! நற்கதி கிடைக்க செய்யும் யோகங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ