சந்திர கிரகணம் 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற மே 5, 2023 வெள்ளிக்கிழமை நிகழும். இது பகுதி சந்திர கிரகணமாக பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. அன்றைய தினம் புத்த பூர்ணிமா மற்றும் சித்திரா பௌர்ணமி ஆகும். மேலும் இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். ஆனால் இந்தியாவில் தெரியாது. அதன்படி இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம். பொதுவாக சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராசிகளில் சந்திர கிரகணத்தின் தாக்கம் எப்படி இருக்கும்
இந்த நிலையில் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது. இரவு 10.52 மணிக்கு கிரகணம் உச்சம் பெற்று, அதிகாலை 1 மணிக்கு நிறைவடைகிறது. அதாவது, உலக நேரப்படி மே 5 ஆம் தேதி பிற்பகல் 3.14 மணிக்கு தொடங்கி மாலை 7.31 மணி வரை சுமார் 4 மணிநேரம் நடைபெற உள்ளது. மறுபுறம் அறிவியல் ரீதியாக ஏற்படும் இந்த நிகழ்வுகளுக்கு ஜோதிட ரீதியாக அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த சந்திர கிரகணம் எந்த ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தரும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | Venus Transit: உச்சத்தை அளிக்கும் சுக்கிரன்... இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் மட்டும் தான்!


சுப பலன்களை பெரும் ராசிக்காரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப வகையில் சந்திர கிரகணம் சுப பலன்களைத் தரும். உங்கள் நிதி பக்கம் வலுவாக இருக்கும். பணம் சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். தொழிலில் அதிக கவனம் செலுத்துங்கள். 


சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பாக அமையும். தொழிலுக்கு நல்ல நேரம். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். திடீரென்று பணம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.


கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களின் பல பிரச்சனைகளை சந்திர கிரகணம் தீர்க்கும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் பெரிய பலன்களைத் தரும். அதே நேரத்தில், வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கலாம்.


மகர ராசி: இந்த சந்திர கிரகணம் மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை பலப்படுத்தும். சிக்கி இருந்த பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். மறுபுறம் சிலருக்கு, இந்த நேரம் பொருளாதார நிலையில் பெரிய உயர்வை கொடுக்கலாம். அதேபோல் வேலையில்லாதவர்கள் அல்லது விரும்பிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


சந்திர கிரகணத்தின் போது சாப்பிடலாமா 
கிரகணத்தின் போது சாப்பிடுவது தவறு என்று ஜோதிடம் கூறுகிறது. சந்திர கிரகணத்தின் போது சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று கூறப்படுகிறது. மேலும், கிரகணம் சக்திவாய்ந்த புற ஊதா கதிர்களின் உமிழ்வை வெளியிடுகிறது. இது சமைத்த உணவை பாதிக்கிறது. இதனால் உடலுக்கு பல தீங்கு ஏற்படும். 


அடுத்த சந்திர கிரகணம் எப்போது
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று நடைபெறும். இது ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள், கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை காண முடியும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ