சித்ரா பவுர்ணமி நாளில் நிகழும் சந்திர கிரகணம்..! இவங்கெல்லாம் ரொம்ப கவனமாக இருக்கனும்..!

சித்ரா பவுர்ணமி நாளில் முழு சந்திர கிரகணம் வருகிறது. இந்தியாவில் தெரியாது என்றாலும், ஜோதிட ரீதியாக ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 1, 2023, 02:43 PM IST
சித்ரா பவுர்ணமி நாளில் நிகழும் சந்திர கிரகணம்..! இவங்கெல்லாம் ரொம்ப கவனமாக இருக்கனும்..! title=

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம். அதாவது, சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும் நிகழ்வு. மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அறிவியல் ரீதியாக ஏற்படும் இந்த நிகழ்வுகளுக்கு ஜோதிட ரீதியாக அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில், கிரக நகர்வினால் இந்த 4 ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சந்திர கிரகணம் எங்கு? எப்போது?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி வந்தது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. இந்நிலையில், மே 5 ஆம் தேதி, ஆண்டின் இரண்டாவது கிரகணம் நடைபெறுகிறது. அது சந்திர கிரகணம் ஆகும். மே 5 ஆம் தேதி நிகழும், இந்த சந்திர கிரகணம் ஒரு நிழல் சந்திர கிரகணமாக இருக்கும். அது இந்தியாவில் காணப்படாது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருக்கும். இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவு 8.45 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நீடிக்கும்.

மேலும் படிக்க | Venus Transit: உச்சத்தை அளிக்கும் சுக்கிரன்... இவர்களின் வாழ்வில் முன்னேற்றம் மட்டும் தான்!

சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: 

மேஷம்

சந்திர கிரகணத்தின்போது மேஷ ராசியினர் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இதனால் தவறான முடிவுகளை கூட எடுக்க தயங்கமாட்டீர்கள். பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். புதிய நபர்களால் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாகன பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். நண்பர்களுக்கு இடையில் கருத்துமோதல் வரலாம்.

மேலும் படிக்க | சுக்கிர மகாதசை: வாழ்க்கை சொர்க்கமாகும்... என்னைக்கும் நீங்க ராஜா தான்!

ரிஷபம்

ரிஷப ராசியினர் சந்திர கிரகணத்தின்போது யாருடன் பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. ஒருவேளை அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டால் உறவுகள் பிரியும் சூழ்நிலை வரும். ஒருசிலர் குடும்ப சூழலை சமாளிக்க கடன் வாங்க வாய்ப்புள்ளது. வேலையிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பீர்கள். இதனால் வேலை பறிபோகும் சூழலும் எழலாம். 

சிம்மம்

நேரம் சுத்தமாக சரியில்லாததால், இந்த சந்திர கிரகணத்தின் போது சிம்ம ராசியினர் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் எச்சரிக்கை வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தவொரு முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டும்.

கடகம்

சந்திர கிரகணத்தின் போது கடக ராசியினர் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தடை, தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் சண்டை வரலாம். பணத்தை கொடுத்த ஏமாற வாய்ப்புள்ளது. எனவே புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

மேலும் படிக்க | 25 மாதம் வரை இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், சனியால் முன்னேற்றம் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News