குரு வக்ரமானால் யாருக்கு பிரச்சனை? மிதுனத்திற்கு செல்வதற்கு முன் இயக்கத்தை நிறுத்தும் குருபகவான் என்ன செய்வார்?
Guru Vakri In Vrishabh On Oct 9 : இன்னும் 20 நாட்களில் அதாவது அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் இயங்கத் தொடங்குவார். வக்ர குருவின் இயக்க மாற்றம் யாருக்கு என்ன செய்யும்?
இந்திய ஜோதிட சாஸ்திரங்களின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். பொதுவாக நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் சுழல்பவை, எனவே அவற்றிற்கு வக்ர இயக்கம் என்பதே கிடையாது. அதேபோல சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்ர இயக்கமே கிடையாது. ஒன்பதில் நான்கு கிரகங்களைத் தவிர எஞ்சிய ஐந்து கிரகங்களுக்கு வக்ர கதி இயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
கிரகங்களின் வக்ர கதி இயக்கம்
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி என ஐந்து கிரகங்களும் வக்ர கதியில் இயங்குகின்றன என்பது உண்மையில் உண்மையா? உண்மை என்றால், இந்த ஐந்து கிரகங்களும் வக்ரமடையும் காலத்தில், கிரகங்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுமா? நன்மையாகவோ அல்லது மோசமான பாதிப்புகளோ ஏற்படுமா?
விஞ்ஞானத்தின் பார்வையில் வக்ரகதி
வக்ரம் என்பது கிரகங்கள் பின் நோக்கி செல்வது போன்ற தோற்றம் ஏற்படுவது தான். உண்மையில் கிரகங்கள் பின் நோக்கி செல்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அறிவியல் அடிப்படையில் பார்க்கும்போது கிரகங்கள் எல்லாம் தங்களது பாதையில் முன்னோக்கி தான் சென்று கொண்டிருக்கும் அவை ஒருபோதும் பின்னோக்கி வருவதில்லை. ஆனால் அவை பின்னோக்கி வருவது போல் தோற்றம் அளிக்கின்றன. அதைத் தான் "வக்ர கதி" இயாம் என்கிறோம்.
வக்ர கதி இல்லாத கிரகங்கள்
சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்களும் இயங்காத நிலையோ அல்லது பின்னோக்கிய இயக்கமோ கிடையாது. அதேபோல ராகு கேது ஆகிய நிழல் கிரகங்கள் இரண்டுமே, பின்னோக்கி தான் இயங்குகின்றன என்பதால், அவற்றுக்கும் வக்ர கதி என்ற பேச்சுக்கே இடமில்லை.
வக்ர கதி காலம்
நவகிரகங்களில் குரு பகவான் மூன்று மாதத்திற்கு அதிகமாகவும், சனி பகவான் நான்கிலிருந்து ஐந்து மாதம் வரையயிலும், செவ்வாய் பகவான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் இரண்டு மாதமும், சுக்கிர பகவான் ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை 50 நாட்கள் வக்கிர கதியை அடைகின்றனர்.
ஆனால், இந்த 5 கிரகங்களும் வக்ரகதியில் இயங்குவது போல தோன்றினாலும், அவை இயங்காமல் நின்றுவிடுகின்றன. அது, அவை பின்னோக்கி நகர்வதைப் போன்ற மாயத் தோற்றத்தையே கொடுக்கின்றன.
கிரகங்கள் வக்ரம் அடைவதால் அவற்றின் செயல்பாடுகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. எனவே, வக்ர கதியைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
குரு வக்ரம்
சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் தற்போது இருக்கும் குரு பகவான், 2025ம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் அக்டோபர் 9 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவார். அதாவது தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்வார்.
பிப்ரவரி 25 வரை இதே நிலையில் இருக்கும் குரு, மே மாதம் வரை ரிஷபத்திலேயே பயணித்து மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்குச் செல்வார்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ