மதுரா: ஐப்பசி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் நாளில் கம்ச வதம் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. மதுரா, பிருந்தாவனம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கம்ச வதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாமனை வதம் செய்த கிருஷ்ணனின் லீலைகளில் முக்கியமான ஒன்று கம்ச வதம். கம்ச வதம் தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வோம். கம்சன், தேவகியின் அண்ணனாக பிறப்பதற்கு முந்தைய பிறப்பு என்னவாக இருந்தது? கம்சன், கண்ணனின் மாமனாக இருந்தாலும், கொல்லப்படுவதற்கான விதி என்ன என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து மத நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணர் ஐப்பசி மாத வளர்ப்பிறையின் பத்தாம் நாளில் கன்சனைக் கொன்றார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி நாளில் மதுரா, பிருந்தாவன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ம் நாளான இன்று கம்ச வதம் நடந்ததாக நம்பிக்கை.


மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்
 
புராண நம்பிக்கைகளின்படி கம்சன், தனது முந்தைய பிறவியில் காலநேமி என்ற அரக்கனாக இருந்தான். அப்போது, காலநேமி விஷ்ணுவின் கைகளில் கொல்லப்பட்டான். காலநேமியின் தந்தை அசுரபதி விரோஜன்.


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரின் போது, ​​காலநேமி தனது திரிசூலத்தால் விஷ்ணுவை தாக்கினார். விஷ்ணு பகவான், அந்த திரிசூலத்தைக் கொண்டே காலநேமியை கொன்றார். அசுரனாக பிறவி எடுத்திருந்த காலநேமி, தனது அடுத்தப் பிறவியில், துவாபர் சகாப்தத்தில் மன்னன் உக்ரசேனின் மகனாகவும், ஸ்ரீ கிருஷ்ணரின் தாய் தேவகியின் அண்ணனாக பிறந்தார்.   


கன்சனுக்கு இரண்டு மனைவிகள் 


புராணங்கள் மற்றும் மத நூல்களின்படி, பிராப்தி மற்றும் அஸ்தி என கன்சனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். மகதத்தின் மன்னன் ஜராசந்தனின் மகள்களான  பிராப்தி மற்றும் அஸ்தி இருவரும் கம்ச வதத்தால் வருத்தமுற்றார்கள்.


மேலும் படிக்க | சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்


ஸ்ரீ கிருஷ்ணர் கன்சனைக் கொன்ற பிறகு, தனது மகள்களை விதவையாக்கிய கிருஷ்ணரை, ஜராசந்தன் எதிர்த்தார். மதுரா நகரை ஜராசந்தன் பலமுறை தாக்கிய போதிலும்,  ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. 


கண்ணனை தனது எதிரியாகவே நினைத்து வாழ்ந்த ஜராசந்தன், மகாபாரதப் போரில் கெளரவர்களின் பக்கம் இருந்தார். அந்தப் போரில், ஜராசந்தன் கொள்ளப்பட்டார்.  


கம்சன் தனது சகோதரி தேவகியை மிகவும் நேசித்தார். தேவகிக்கு திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு கிளம்பும்போது, ​​தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது மகனே கன்சனின் மரணத்திற்குக் காரணம் என்று அசரீரி தெரிவித்தது.


தங்கையின் மீது இருந்த பாசத்தால், அவளைக் கொள்ளாமல், தேவகியையும் வாசுதேவரையும் அண்ணன் கம்சன் சிறையில் அடைத்தார். கண்ணனுக்கு முன் பிறந்த குழந்தைகளை, பிறந்தவுடனே கொன்ற கம்சனை, கிருஷ்ணர் வதம் செய்தார். அந்த கம்சவத தினம் இன்று.  


மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ