கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் செய்யும் நாளை கன்யா சங்கராந்தி என்று அழைக்கிறோம். கன்யா சங்கராந்தி நாளில் சூரியனை வழிபடுவது முக்கியமானது. ஜோதிடத்தில் ஆன்மாவி குறியீடாக கருதப்படும் சூரியன், நவகிரகங்களின் அரசர் ஆவார். அதனால் தான் பிற கிரகங்களின் முக்கியத்துவத்தைவிட, சூரியனின் இயக்கத்திற்கும், பெயர்ச்சிக்கும், சஞ்சாரத்திற்குக்ம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ராசியில் சுமார் ஒரு மாதம் இருக்கும் சூரிய பகவான், தனது பயணத்தை மாற்றி அடுத்த ராசிக்குள் நுழைவதால் உருவாவதன் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. மொத்தம் 12 ராசிகள் இருப்பதால் வருடம் முழுவதும் 12 சங்கராந்திகள் வருகின்றன. கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சி செப்டம்பர் மாதத்தில் நிகழும், இந்த கன்யா சங்கராந்தியால் புரட்டாசி மாதம் துவங்குகிறது.


கன்யா சங்கராந்தி காலம்


சூரியன் கன்னி ராசியில் நுழையும் நேரத்தை கன்யா சங்கராந்தி காலம் என்று அழைக்கிறோம். கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். செப்டம்பர் 17, அதாவது நாளை காலை சூரியனுக்கு தர்ப்பணங்கள் செய்வோம். ஏனென்றால்  செப்டம்பர் 16 மாலையில் சூரியன் கன்னி ராசியில் நுழைகிறார். எனவே உதய காலத்தின்படி, நாளைக் காலையில் சங்கராந்தி தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். 


கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், மோசமான காலத்தை கடக்கவிருக்கும் ராசிகள் என்றால், சிம்மம், துலாம், மகரம் என 3 ராசிகளை சொல்லலாம். 


மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!


சிம்ம ராசி


சிம்மத்தில் இருந்து கன்னிக்கு மாறும் சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும், எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலை கவனமுடன் செய்ய வேடும். கன்னியில் சூரியன் சஞ்சரிக்கும் ஒரு மாதமும் ஆரோக்கியத்திற்கு கவனம் கொடுக்க வேண்டும்.


துலாம்


கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, துலாம் ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், புரட்டாசி மாதம் துலா ராசிக்காரர்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். நீண்ட கால முயற்சிகள் பலன் தராமல் போகலாம். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம்.


மகரம்


கன்னி ராசியில் சூரியன் இருக்கும் ஒரு மாத காலமும் மகர ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் மோதல் போக்கு இருக்கும், அனைவரின் அதிருப்தியையும் சமாளிக்க வேண்டியிருக்கும். நினைத்த காரியங்களை செய்வதில் தாமதம் ஏற்படும். கவனமாக இருந்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குரோதி ஆண்டு நவராத்திரி எப்போது தொடங்குகிற்து? அன்னை துர்க்கையை வழிபடும் நேரம் காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ