நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். இவர் தனுசு, மீனம் ராசிகளை ஆட்சி செய்கிறார். புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார். ஒருவருக்கு குரு மகாதிசை என்பது 16 ஆண்டுகள் நீடிக்கும்.  இந்த காலத்தில் பக்தி உணர்வு அதிகரித்து ஆன்மிகத்தில் ஈடுபட குரு அருள் புரிவார். நீதி தவறாமல் நேர்மையாக செயல்பட வைப்பதோடு, செல்வ வளத்தை அள்ளித் தருவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் குருவின் பகை கிரகங்களான சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் ஆளக்கூடிய ராசிகளுக்கு பெரியளவில் யோக பலன்கள் இருக்காது. அந்த வகையில், ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் லக்னம் உள்ளவர்களுக்கு குரு மகா திசை நடக்கும் போது, பெரிய அளவில் யோக பலன்கள் இருக்காது. எனினும் நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களின் மூலம் யோக பலன்களை அதிகரிக்கலாம்.


குரு திடை நடக்கும் காலத்தில் எப்படிப்பட்ட பலன்கள்,  கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். குரு திசை காலத்தில் வருமானம் சிறக்கும், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.  நல்ல தர்ம சிந்தனைகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் ஒழுக்கத்துடன் செயல்படும் குணம் இருக்கும்.  குரு திசை நடக்கும் நபர்  சாந்தமாக இருப்பார்கள்.


மேலும் படிக்க | மீனத்தில் இணையும் குரு - சுக்ரன்! ‘3’ ராசிகளின் தலையெழுத்து மாறும்! 


சுப நிலையில் குரு


ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி,  ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அமைதியானவர்களாகவும், அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருக்கும் போது, ​​ தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையை சந்திப்பதில்லை. மாறாக, இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் குருவின் மஹாதசை தொடங்கும் போது, ​​அவர்களுக்கு நிறைய முன்னேற்றம், மரியாதை, செல்வம், தாம்பத்திய சுகம் கிடைக்கும்.


மேலும் படிக்க | அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள் 


அசுப நிலையில் குரு


இது தவிர, யாருடைய ஜாதகத்தில் குரு அசுப நிலையில் இருக்கிறார்களோ, அத்தகையவர்கள் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். இவர்கள் தொழிலில் மிகவும் சிரமப்பட வேண்டி வரலாம். மறுபுறம், அத்தகையவர்களின் வாழ்க்கையில் குரு மகாதசை தொடரும் போது, ​​​​பல சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன. திருமண வாழ்க்கையில் பலவிதமான தடைகள் வர ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஆரோக்கியமும் மோசமடையத் தொடங்குகிறது.


பரிகாரங்கள்


ஒருவரின் ஜாதகத்தில் குரு பலவீனமான அல்லது அசுபமான நிலையில் இருந்தால், ஜோதிடத்திலும் இதற்கு பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்டவர்கள் வியாழக்கிழமை விரதம் அனுஷ்டிக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை ஊற வைத்து மாலையாக கோர்த்து சமர்பிக்க வேண்டும். மேலும், மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்லது. இந்த நாளில் இனிப்புகள் அல்லது உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. விஷ்ணுவை வழிபட்டாலும் குரு பலம் பெறுகிறார். இதனுடன் குளிக்கும் போது மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் குளிக்கவும். வாழை மரத்தில் வியாழன் அன்று  மஞ்சள், வெல்லம் மற்றும் உளுத்தம் பருப்பு படைத்து வழிபடவும். வியாழன் அன்று ஏழை எளியவர்களுக்கு உளுத்தம்பருப்பு, வாழைப்பழம், மஞ்சள், இனிப்புகளை தானம் செய்வதும் குருவை வலுப்படுத்துகிறது.


மேலும் படிக்க | பிப்ரவரி மாத பெயர்ச்சிகளால் ‘இந்த’ ராசிகளுக்கு பணத் தட்டுபாடே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ