அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள்

Akhand Samrajya Yoga: அண்மையில் சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது குருப் பெயர்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், இந்த இரு பெயர்ச்சிகளால், ஏற்படும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 27, 2023, 10:43 AM IST
  • அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் அமர்க்களப்படப்போகும் ராசிகள்
  • சனியும் குருவும் சேர்ந்தால் மங்களம்
  • மங்களத்தைக் கொடுக்கும் சுப யோகத்தின் பலன்கள்
அகண்ட சாம்ராஜ்ய யோகத்தால் பிரபலமாகப் போகும் 3 முத்தான ராசிகள்

Shani Guru Gochar 2023:  அண்மையில் சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. தற்போது குருப் பெயர்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில், இந்த இரு பெயர்ச்சிகளால், ஏற்படும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பொதுவாக ஒரு ஜாதகத்தில், லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டின் அதிபதியும், ஐந்தாம் வீட்டின் அதிபதியும், சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7,10 ஆகிய வீடுகலில் உச்சம் பெற்று ஆட்சி அமைத்தால், அந்த ஜாதகருக்கு அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது.

அகண்ட சாம்ராஜ்ய யோகம் என்பது, தலைமை தாங்கும் யோகத்தையும், முன்நின்று வழிநடத்தும் பொறுப்பையும் கொடுத்து, ஒரு தலைவராக முன்னேற்றும் யோகம் ஆகும். பலரும் போற்றும் தலைவனாக உருவெடுப்பவர்களுக்கு, கண்டிப்பாக அகண்ட சாம்ராஜ்ய யோகத்தின் பாக்கியம் அமைந்திருக்கும்.  

 கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பல சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. சில யோகங்கள் மிகவும் மங்களகரமானவை, அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்கின்றன. 3 ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் விரைவில் ஏற்படவிருக்கிறது.

மேலும் படிக்க | தை மாத ராசி பலன்: ஆரோக்கியத்தில் ‘சில’ ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை!

மிகவும் மங்களகரமான யோகம் ஏப்ரல் 22, 2023 அன்று நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சியால் ஏற்படவிருக்கிறது. நீதியின் கடவுளும், தேவர்களின் குருவும் இணைந்து ஏற்படுத்தும் யோகம், அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தவிருக்கிறது.  

அகண்ட சாம்ராஜ்ய யோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்...

மேஷம்: அகண்ட சாம்ராஜ்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு திடீரென பண பலன்கள் கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தையில் அனுகூலம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியும் குரு சாண்டள யோகமும்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி இரண்டும் சாதகமாக இருக்கும். இவர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். இதுவரை உங்கள் மனதை கஷ்டப்படுத்தி வந்த ஒரு பிரச்சனை உங்களுக்கு சாதகமாக முடியும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகும் அகண்ட சாம்ராஜ்ய யோகம் வாழ்க்கையை மேம்படுத்தும். பண வரத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்து வந்த பணங்களும், வாராக்கடன்களும் பைசலாகும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவுகள் மற்றும் நட்புகள் மகிழ்ச்சி கொடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News