கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைக்கும் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், நவகிரங்களும், அஷ்டதிக் பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர். கோமாதா பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கோபூஜையை  செய்வதால் பணக்கஷ்டம் தீரும். கோபூஜை செய்யத் தொடங்கும் முன்னரே மகாலக்ஷ்மி அங்கு வந்து விடுகிறாள். முறைப்படி செய்த கோபூஜையில் திருப்தியடைந்து அங்கேயே குடி கொண்டு விடுகிறாள். பசுவின் கால் பட்ட மண், பசுக் கொட்டிலில் கிளம்பும் புழுதி நம்மீது படுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோபூஜை செய்தால் சகல பாவங்களும் விலகி விடுகிறது. அனைத்துப் புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கிறது. பசுவின் கோமியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோமியத்துடன் பசுவின் சாணம், நெய், பால், தயிர் ஆகியவை கலந்த கலவையே மிகவும் புனிதமான பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், அங்குப் பட்டுக் குடையைப் பிடிக்கச் செய்து, ரோஜா, தாமரை, நாணயங்கள், செவ்வரளி போன்ற மலர்களால் ஸ்ரீசூக்தம் சொல்லி, அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!


கோ பூஜையில் நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்யம் செய்யப்படுகிறது. இந்தப் பூஜையைப் பார்த்து, மனதார வணங்கினாலே அனைத்துத் தோஷங்களும் நீங்கி வாழ்வில் ஆனந்தம் நிலைக்கும். வீட்டில் எப்போதும் கஷ்டம், சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது என்றால் நவகிரஹ கோளாறு உள்ளது என்று அர்த்தம். இந்த நவகிரஹ கோளாறு நீங்க வேண்டும் என்றால் கோபூஜை, கோதானம் செய்வது சிறந்தது. பசுவின் உடலில் அனைத்துத் தேவர்களும், நவக்ரஹங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்தால் நவக்ரஹ தொல்லையிலிருந்து விடுபடலாம். 


பிதுர் தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாகச் செய்யவில்லை என்றால் பிதுர் தோஷம், பிதுர் சாபம் ஆகியவை ஏற்படும். அவை தீர வேண்டுமானால் கோதானம் செய்ய வேண்டும். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் கடுமையான தோஷம் இருக்கிறது என்று பொருள். அதற்குப் பரிகாரம் கோதானமும் கோபூஜையுமே. குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்றாலோ, குழந்தைகள் தீய வழிகளில் சென்றாலோ, கோபூஜை அல்லது கோதானம் செய்வது நல்லது.


வலிமை வாய்ந்த சனிக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடவும், நோய்களிலிருந்து விடுபடவும் கோபூஜை மிகவும் அவசியமாகிறது. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேரவும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கவும் கோபூஜை செய்வது அவசியம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ