ஒருவருடைய ஜாதகத்தில் பல யோகங்கள் கிரகங்களின் சேர்க்கையுடன் உருவாகின்றன, அவை வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த யோகங்களைப் பற்றி நமக்குத் தெரியாது, ஆனால் அவை நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு கிரகமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகத்துடன் இணையும்போது ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.


கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் சுபமான அல்லது அசுப விளைவை ஏற்படுத்தும். நாளை சுக்கிரன் கிரகம் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் நுழையப் போகிறது. ஏற்கனவே புதன் கிரகம் ரிஷபத்தில் அமர்ந்துள்ளதால், இந்த இரு கிரகங்களின் இணைவால் லக்ஷ்மி நாராயண யோகம் ஏற்படுகிறது. 


நாளை அதாவது ஜூன் 18ம் தேதி ஏற்படும் இந்த யோகம் ஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கும்?


மேலும் படிக்க | 3 நாட்களில் லட்சுமி நாராயண யோகம்; இவர்களின் தலைவிதி மாறும்


லக்ஷ்மி நாராயண் யோகம்
இந்திய ஜோதிடத்தின்படி, லக்ஷ்மி நாராயண் யோகம் என்பது, ஒருவரின் ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களின் இணைவால் ஏற்படுகிறது.


புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு போன்றவற்றுக்கு அதிபதியான புதனும், அழகு மற்றும் காமத்தின் அதிபதி சுக்கிரனின் சேரும்போது ஏற்படும் லஷ்மி நாராயண யோகத்தில், புதனுக்கு விஷ்ணு ஸ்தானமும், சுக்கிரனுக்கு லக்ஷ்மி ஸ்தானமும் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒரு நபரை காதலில் வல்லவராகவும் கலைஞராகவும் மாற்றுகிறது. 


இந்த யோகம் அமைதியையும் செழுமையையும் மேம்படுத்துகிறது. இந்த யோகத்தில் வியாழன் கிரகத்தின் பலனும் சாதகமாக இருந்தால் வாழ்க்கையில் மேலும் மேன்மை ஏற்படும்.


மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 


இந்த யோகம் லக்னம், ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் வீட்டில் அமைந்தால், அது ஒரு நபரை கலைகள் அனைத்திலும் முழுமை அடையச் செய்கிறது. இந்த யோகம் ஐந்தாம் வீட்டில் வலுவாக அமைந்தால் அந்த ஜாதகரை மனிதனை அறிவாளியாக்கும். சுக்கிரன் புதனுடன் இணைவது இந்த யோகத்தின் நற்பலன்களை அதிகரிக்கிறது.


லக்ஷ்மி நாராயண யோகம் மேஷம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை, ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு வலுவாகவும் சாதகமாகவும் இருக்கிறது.


ஜாதகத்தின் பன்னிரண்டாம் வீட்டின் சுக்கிரன் கன்னியைத் தவிர வேறு எந்த ராசியிலும் அமைந்திருந்தால், அது "போக யோகத்தை" உருவாக்குகிறது. இந்த யோகம் சுக்கிரன் தொடர்பான அனைத்து பலன்களையும் கொடுக்கிறது. 


பல ராஜயோகங்கள் சுக்கிரனின் நிலை காரணமாக உருவாகின்றன. எல்லா வகையிலும் சக்தி வாய்ந்த சுக்கிரன் கிரகமே ராஜயோகம் தரும். இந்த யோகம் கன்னி லக்னத்தில் அதிர்ஷ்டம் மற்றும் நிதிக்கு அதிபதியாக இருக்கும் போது சுக்கிரன் நன்மை செய்பவராக செயல்பகிறார். 


அதேபோல், இந்த சிறப்பு ராஜயோகம் மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரு ராசிகளிலும், இந்த யோகம் உருவானால் அது பிற கிரகங்களின் அனைத்து தீங்கான விளைவுகளிலிருந்து விடுபடவும், சிறந்த பலன்களை அளிக்கும் ராஜயோகத்தை உருவாக்குகிறது.


மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


லக்ஷ்மி நாராயண் யோகம் மற்றும் சுக்கிரன் கிரகம் அழகு, ஈர்ப்பு, அமைதி, செழிப்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு நன்மை அளிப்பவை. ஆனால் இவை அனைத்தும் உங்கள் லக்னம் மற்றும் உங்கள் வீட்டின் அதிபதியைப் பொறுத்தது.


லக்ஷ்மி நாராயண யோகம் ஏற்பட்டாலும், சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தால், அது அசுப பலன்களைத் தரும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 


இந்த யோகம் சுக்கிரன் லக்னத்துடன் தொடர்புடையதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் கவர்ச்சியானவராகவும், பொழுதுபோக்கை அனுபவிப்பவராகவும் மாறுவார். அதி நவீன வாழ்க்கையை நடத்தவும், நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடவும், ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கவும் விரும்புபவராக இருப்பார். 


ஆனால் இந்த கிரகம் லக்னத்தில் வலுவிழந்த நிலையில் இருந்தால், அந்த நபருக்கு வாழ்க்கையில் அதிக அலைச்சல்கள் இருக்கும். திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்திருப்பார். 


ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக அமைந்திருந்தால், அவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும் கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அது பலவீனமான நிலையில் இருந்தால், அவர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR