Lord Shani And Devotion: சனிதேவர்: சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமை சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சனீஸ்வரர் அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கை. அதிலும், சனீஸ்வரரை இந்த 5 ராசிக்காரர்கள் வணங்கி, குறிப்பிட்ட சில பரிகாரங்களை சனிக்கிழமையில் செய்து வந்தால் சனிபகவானின் கொடூரப் பார்வை விலகி அசுப பலன்கள் குறையும். சனீஸ்வரரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து, அவற்றை நம்பிக்கையுடன் செய்து வந்தால், அதன் பலன்களை அனுபவிக்கலாம். சனிக்கிழமை பரிகாரங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி தேவன், ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதாக ஐதீகம். நல்ல செயல்களைச் செய்பவர்களுக்கு நல்ல பலன்களும், தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையும் கொடுப்பார் சனீஸ்வரர். ஈஸ்வர பட்டம் வென்ற ஒரே நவக்கிரகமான சனி பகவான், சனிக்கிழமையன்று தன்னை துதிப்பவர்களுக்கு அருள் ஆசி வழங்குகிறார். 


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 


சனிக்கிழமையன்று செய்யும் இந்த பரிகாரங்களை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் சில நாட்களில் சனிபகவானின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படும், அப்போது 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஏற்பட சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட வேண்டும்.


தற்போது மகரம், கும்பம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி திசையின் தாக்கம் உள்ளது. இந்த ராசிக்களை சேர்ந்தவர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களை போக்கும் பரிகாரங்கள் இவை...


மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் பிரகாசிக்க, சனிக்கிழமை மாலை ஒரு கருப்பு நாய் அல்லது கருப்பு பசுவிற்கு உணவு கொடுக்க வேண்டும்.


சனி யந்திரத்தை சனிக்கிழமை நாளில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனிபகவான் அருள்புரிவார் என்பது நம்பிக்கை.


மேலும் படிக்க | சனியின் மாற்றத்தால் உருவாகும் ‘விபரீத ராஜயோகம்’: 3 ராசிகளுக்கு மகத்தான வெற்றி, மகிழ்ச்சி!!


சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவதன் மூலமும், சனி தேவருக்கு உரிய மந்திரங்களை படித்தால் சனி தேவன் மகிழ்ச்சி அடைகிறார்.


சனிக்கிழமையன்று சிவபெருமானை வழிபடுவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் சிவனை வழிபடுவதால் சனியின் தோஷங்கள் குறையும் என்பது ஐதீகம்.


சனிக்கிழமை வீட்டை தூய்மை செய்ய துடைப்பம் வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில், எள் கலந்த உணவுகளை உண்பதும், எள் கலந்த நீரில் குளிப்பதும் நன்மை பயக்கும்.


சனிக்கிழமைகளில் நீல நிறம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் சனிதேவர் மகிழ்ச்சி அடைவார்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ