நவகிரகங்களில் சனி என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயந்து நடுங்குவார்கள். அதற்கு காரணம், ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, ஜென்ம சனி என சனியின் சஞ்சாரத்தின் அடிப்படையில் ஜாதகத்தைப் பற்றி பேசும்போது, சனியின் சஞ்சாரத்தால் பாதகமான பலன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சனி என்றாலே பலரும் பயப்படுகின்றனர். உண்மையில், சனி தான் நாம் செய்யும் காரியங்களுக்கான பலனைக் கொடுக்கும் நீதிபதியாக செயல்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, சனி பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ம் இடங்களை பார்ப்பார், சனியின் பார்வை பட்ட இடங்கள் பாதகமான பலனைக் கொடுக்கும். இதன் அடிப்படையில் தான் கோவிலுக்கு சென்றாலும், சனீஸ்வரரின் முன்பு நிற்காமல், பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் லக்னத்தில் இருந்தால் உடன் பிறந்தவர்களுடன் மோதல் போக்கு, திருமணம் தாமதமாவது, தொழில் முடக்கம் போன்றவை ஏற்படும்.


இதுவே சனி லக்னத்தில் இருந்து இரண்டாவது வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் முதல், சொத்து வாங்குவது என பல விஷயக்களில் சிக்கல் ஏற்படும். ஆயுள் பலம் குறையும் என்று சொல்வார்கள். தொழில் செய்தாலும் பிரச்சனை, லாபம் கிடைக்காது. இப்படிப்பட்டவர்கள், தங்கள் பெயரில் தொழில் நடத்தாமல், குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது கணவன்/மனைவி பெயரில் தொழில் தொடங்குவது நல்லது.


மேலும் படிக்க | புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!


சனி பகவான், ஒருவரின் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீட்டில் இருந்தால், பூர்வீகம் சார்ந்த பிரச்சனை சிந்திப்பதில் தடுமாற்றம் தந்தையின் உறவு நிலை சரியில்லாமல் போவது, உறக்கமின்மை என மனதில் கவலைகள் அதிகமாக இருக்கும்.


இதுவே, சனீஸ்வரர் நான்காம் வீட்டில் இருந்தால், சோம்பேறியாக இருப்பார்கள். சனீஸ்வரர் ஐந்தாம் வீட்டில் இருந்தால், சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும், குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். 


ஆறில் சனீஸ்வரர் இருந்தால் அற்ப ஆயுள் என்பது கவலைக்குரிய விஷயம். ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமலேயே விபத்து போன்ற திடீர் நிகழ்வுகளால் மரணம் ஏற்படலாம் என்பதால், ஆறில் சனி இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகள் செய்தாலும் அதில் சுணக்கம் இருக்கும்.


ஏழில் சனி இருக்கும்போது, திருமணத்தில் மனகசப்பு இருக்கும். வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்தல் அல்லது மனதிற்கு ஒப்பாத திருமணம், தந்தையுடனான உறவு கெட்டுபோவது, தாயின் ஆரோக்கியத்தில் சிக்கல் என பல பிரச்சனைகள் உண்டாகும்.


மேலும் படிக்க | கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்!


லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால் குடும்பம் அமைவதில் தாமதம், பூர்வீக சொத்தில் பிரச்சனை, தொழில் பிரச்சனை, பிள்ளைகளால் பிரச்சனை என வாழ்க்கையில் பிரச்சனை அதிகமாக இருக்கும்.


சனி ஒன்பதில் இருந்தால் போட்டிகளில் தோல்வி, தொட்ட காரியங்கள் தாமதமாவது, வேலையில் நிறைவு இல்லாமல் போவது எஅன நிம்மதியற்ற வாழ்க்கை இருக்கும். அதேபோல பத்தில் சனீஸ்வரர் ஆட்சி பெற்றிருந்தால், சுகம் கெடுதல், திருமணம் தாமதமாவது என பல கெடுபலன்கள் ஏற்படும்.


பதினொன்றாம் வீட்டில் சனி இருந்தால், ஆயுள் குறைவாக இருக்கும், முயற்சிகள் பலன் கொடுக்காது, மற்றும் தனவிரயம் உண்டாகும். பனிரெண்டில் சனி இருந்தால், சேமிப்பு கரைவது, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை சரியான வேலை இல்லாத நிலை தந்தை வழி ஆதரவு இல்லாமல் போவது என பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.


இவை அனைத்தும் சனி வேறு எந்த சுப கிரக தொடர்பும் இல்லாத நிலையில் அவரின் பார்வை தரும் பலன்கள் தான். சனியால் தாமதம் ஏற்பட்டாலும், விதிப்பயன் இருந்தால் அதனை கொடுப்பார், கெடுக்கமாட்டார். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்தால் சனீஸ்வரரால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.


மேலும் படிக்க | திங்களன்று மிதுனத்திற்குள் நுழைந்த செவ்வாய்! 5 ராசிக்காரர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ