கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்!

Weekly Horoscope - Monday - Sunday : கிருஷ்ணாஷ்டமியில் தொடங்கும் இந்த வாரம் முழுக்க கோலாகலமாக இருக்கும். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன் இது...

ஆகஸ்ட் 26, 2024, திங்கட்கிழமை முதல் செப்டம்பர் 1, 2024 ஞாயிற்றுக்கிழமை வரையில், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான ராசிபலன்களைத் தெரிந்துக் கொள்வோம்...

1 /13

திங்கட்கிழமை நாளான இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்களில் 5 ராசிகள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்

2 /13

மீன ராசியினருக்கு உகந்த வாரமாக கிருஷ்ணாஷ்டமியில் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. காரியத்தடைகள் விலகி, சுப காரியங்கள் நடைபெறும், கவலைகளை ஒதுக்கி வைக்க இந்த வாரம் வழிகாட்டும்

3 /13

பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் வாரம் இது. கும்ப ராசிக்காரர்களின் மனதில் நிம்மதியைக் கொடுக்க கண்ணன் தயாராகிவிட்டார். சரணாகதி தத்துவம் புரிந்த கும்ப ராசிக்காரர்களின் மனதில் அமைதி நிலவும் வாரம் இது

4 /13

தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம், வாயை கட்டுப்படுத்துவது நல்லது. அநாவசியமாக யாரிடமும் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் இந்த வாரம் பிரச்சனையில்லாமல் நகர்ந்து போகும்

5 /13

குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு கிருஷ்ணாஷ்டமியன்று கண்ணனே குழந்தையாக வந்து வீட்டில் தவழும் வரத்தை அருள்வார். அதிலும் தனுசு ராசியினர் மீது கண்ணனுக்கு தனி அன்பு உண்டு. இந்த வாரம் மனதில் நிம்மதி அதிகரிக்கும்

6 /13

கிருஷ்ணாஷ்டமியில் தொடங்கும் இந்த வாரம், கண்ணனின் அருளுடன் வளமாய் வாழ விருச்சிக ராசியினருக்கு உத்தமமானதாக இருக்கும். பிறருக்கு உதவ முன்வந்தால், உங்களுக்கு கண்ணன் உதவுவார். தானங்கள் செய்தால் நல்லது

7 /13

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் சுமாரானதாக இருக்கும். மனதின் கவலைகளுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்ற ஏக்கம் அதிகரிக்கும். கண்ணனை சராணகதி அடைந்தால், கவலைகளை வேரறுப்பார்

8 /13

கன்னி ராசியினருக்கு கமலக்கண்ணனின் அருளால் இந்த வாரம், வரமாக மாறும். நல்ல செய்திகள் வந்து சேரும், குடும்பத்தில் நிம்மதி நிலவும், எதிர்பார்த்த செய்திகள் வராமல் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்

9 /13

எதிர்பார்த்த செய்தி வந்துசேரும், மனதில் நிம்மதி பிறக்கும் வாரம் இது. யசோதை அன்னையையும், தேவகியையும் மகிழ்வித்த கண்ணன் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார்

10 /13

தொழில் வியாபாரம் செழிக்கும் வாரம் இது. முதலீடு செய்த பணம் இரட்டிப்பு லாபம் கொடுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் வாரம் 

11 /13

உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கும், கமிஷன் வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும், மனதில் கவலைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள்

12 /13

ரிஷப ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும், ஆசைகள் நிறைவேறும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கிருஷ்ணரின் அருளாசி இந்த வாரம் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைக்கும்

13 /13

மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் எழலாம், கிருஷ்ணனை வணங்கினால் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்