குரு பெயர்ச்சியால் உருவாகும் அபூர்வ யோகம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜவாழ்க்கை
Guru Peyarchi: இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் இயக்கங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில நேரங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இந்த கிரக சேர்க்கைகளால் சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
இன்னும் சில மாதங்களில் கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாயும் குரு பகவானும் ஒரே ராசியில் சேரவுள்ளனர். இந்த சேர்க்கையால் ‘நவபஞ்சம’ உருவாகின்றது. இந்த யோகம் ஒரு சுபமான யோகமாக கருதப்படுகின்றது. இந்த யோகத்தின் உருவாக்கத்தால் சில ராசிகளுக்கு (Zodiac Signs) திடீர் பண வரவு ஏற்படும், அபரிமிதமான வெற்றிகள் கிடைக்கும்.
மே 1, 2024 அன்று மதியம் 1:50 மணிக்கு குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ஜூலை 12-ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஆகையால் ஜூலை 12 -க்கு பிறகு ரிஷப ராசியில் குரு செவ்வாய் சேர்க்கையால் நவபஞ்சம் யோகம் உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசியின் இரண்டாம் வீட்டில் நவபஞ்சம் யோகம் உருவாகும். இந்த யோகம் காரணமாக மேஷ ராசிக்கார்ரகளுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல பணிகள் இப்போது முடிவடையும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். இப்போது நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். பிற முதலீடுகளையும் இப்போது செய்யலாம், இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். இந்த யோகத்தின் தாக்கத்தால், மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள்.
மேலும் படிக்க | சனியின் ராசியில் சூரியன் உச்சம், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசியின் முதல் வீட்டில் நவபஞ்சம மகாயோகம் உருவாகும், ரிஷப ராசிக்காரர்களுக்கு வசதி வாய்ப்புகள் கூடும். பொருளாதார நிலை மேம்படும். செலவுகளும் அதிகமாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல விதமாக நேரம் கழியும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. சட்ட வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவற்றில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும் காலம் இது. துணிச்சலுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
சிம்மம் (Leo)
சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் நவபஞ்சம் யோகம் உருவாகி வருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் பல மகத்தான வெற்றிகளைப் பெறுவீர்கள். தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | புதன் அருளால் இந்த ராசிகளுக்கு பொற்காலம்: ப்ரமோஷன், பண வரவுக்கு ரெடியா இருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ