சனியின் ராசியில் சூரியன் உச்சம், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்

பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் கூட்டணி பிரிகிறது. புது கூட்டணி உருவாகிறது. மகரம் ராசியில் உள்ள சூரியன் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி கும்ப ராசிக்கு மாறுகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள் என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 8, 2024, 02:34 PM IST
  • ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாகப் போகிறது.
  • பிப்ரவரி 13 சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
  • சூரிய கிரகத்தின் சேர்க்கை சனியுடன் ஏற்படும்.
சனியின் ராசியில் சூரியன் உச்சம், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் title=

பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சூரிய கிரகத்தின் சேர்க்கை சனியுடன் ஏற்படும். தற்போது சனி கூபா ராசியில் தான் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சூரியன் மற்றும் சனி கிரகத்தின் சேர்க்கை மிகவும் சுபமாக கருதப்படும் ஒரு ஜோதிட நிகழ்வாகும். இந்த சேர்க்கையால ஐந்து ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களை அள்ளித் தரும், இதனுடன் இந்த ஐந்து ராசிக்காரர்கள் இரட்டிப்பு பண பலன்களை, பல நல்ல வாய்ப்புகளையும் பெறுவார்கள். இந்நிலையில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் எந்த ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாகப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையானது அதிகப்படியான பலன்களைத் தரப் போகிறது. இந்த இணைவால் மேஷ ராசிகளின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உங்களின் அனைத்து விருப்பங்களும் நீங்கள் நினைத்தப் படியே நிறைவேறும். குழந்தைகளின் முழு ஆதரவையும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலக வேளையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதுமட்டுமின்றி, தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய சாதனைகளை செய்வீர்கள். குடும்ப வாழ்க்கையை வலுவாகவும் நேர்மையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!| 

ரிஷபம்: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். வெளிநாட்டில் சொத்து வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக ப்ரமோஷன் போன்றவற்றை பெறலாம். முதலீடு செய்ய ஏற்ற காலம். நல்ல வருமானத்தைப் பெறலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதன் மூலம் வங்கி இருப்பு அதிகரிக்கும். 

மிதுனம்: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சில முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றன் பின் ஒன்றாக பல வெற்றிகளை ருசிப்பீர்கள். இலாப வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாவே வரும். வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை முன்பே விட இந்த காலக்கட்டத்தில் சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் மட்டுமே வீசும்.

கன்னி: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்த இதுவே சரியான நேரம். மனைவியுடன் நேரத்தை கழிப்பீர்கள். இதனால் உங்களின் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

தனுசு: தனுசு ராசிக்கு சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அதிர்ஷ்டம் உண்டாகும். தந்தையின் முழு ஆதரவை பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். மக்களின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் எற்படும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News