Mars Transit 2024: ஜோதிடத்தின்படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார் செவ்வாய். இந்த கிரகம் ஒரே ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். அது மட்டுமின்றி செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி ஆவார். அதன்படி இன்னும் 5 நாட்களில் செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்த பயணித்து வரும் செவ்வாய் இந்த மாதம் 26 ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறது. மேலும் இந்த நிகழ்வானது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில் நிகழப் போகிறது. எனவே இந்த செவ்வாய் பெயரச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரும். இந்த பெயர்ச்சி கிருஷ்ண ஜெயந்தியில் நடக்கப் போவதால் இது சில ராசிக்காரர்களை செல்வந்தராகவும், கோடீஸ்வரரர்ராகவும் மாற்றும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி அடைவதால் பல ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள். மேலும் பல ராசிக்காரர்கள் வெற்றி அடைவார்கள், இவர்கள் இதுவரை பணப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தால் அதிலிருந்து விடுப்டுவார்கள். எனவே செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


மேஷ ராசி (Aries Zodiac Sign): ஜோதிடத்தின்படி, செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நல்ல இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். பொருளாதாரம் நிலையில் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பை பெறுவார்கள். திருமணம் சுபகாரியமும் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Saturn Nakshatra Transit In Poorattathi 2024 : சனி பெயர்ச்சி இன்னும் 2 மாதங்களுக்கு.. மகா பொற்கால அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு


சிம்ம ராசி (Leo Zodiac Sign): ஜோதிடத்தின்படி, செவ்வாய் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மங்களகாரமான பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறலாம். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். நிதிநிலை முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்ய சாதகமான காலமாக இருக்கும்.


கன்னி ராசி (Virgo Zodiac Sign): ஜோதிடத்தின்படி, செவ்வாய் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும், பண பலம் அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவு நிறைவுப் பெறும். செல்வம் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் தன்னம்பிக்கையால் சிறப்பான வெற்றியை கிடைக்கலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செப்டம்பர் மாத ராசிபலன்! ஐபோன் 16 வாங்கும் அளவு பணம் வந்து குவியும்! அதிர்ஷ்டக்கார ராசி...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ