நெருங்குகிறது செவ்வாய்ப் பெயர்ச்சி! அங்காரக தோஷத்தை ஏற்படுத்தும் மங்களகாரகர்!

Angaraga Peyarchi: நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு அங்காரகர் என்ற பெயர் உண்டு. செவ்வாய் பெயர்ச்சியால் அங்காரக தோஷம் உள்ளவர்களுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்கனத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு "செவ்வாய் தோஷம் அல்லது அங்காரக தோஷம்" உள்ளது என்று அர்த்தம்...  

1 /8

ஆகஸ்ட் 26ம் நாளன்று மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், ஒவ்வொரு ராசியினருக்கும் மாறுபட்ட பலன்கள் இருக்கும். அதில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பாதிப்பு இருக்குமா? செவ்வாய் தோஷம் என்றால் என்ன? தெரிந்துக் கொள்வோம்...

2 /8

9 நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு, ஒரு கிரகத்தின் ராசிவீட்டில் இருக்கும்போது மற்றொரு கிரகத்தின் பலன்கள், அதனை ஒட்டியே இருக்கும். அதன் அடிப்படையில், புதனின் ஆட்சி ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடமாக மிதுனம், கன்னி ராசிகள் அமைந்தால் செவ்வாய் தோஷமில்லை. தற்போது புதனின் ராசிக்கு தான் செவ்வாய் பெயர்ச்சியடையவிருக்கிறார்  

3 /8

செவ்வாய் தன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம் ராசிகளில் இருக்கப்பெற்று, ஜென்ம இலக்கினத்திற்கு நான்காமிடமாக மேஷம், விருச்சிகம் அமைந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷமில்லை என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது

4 /8

செவ்வாய்க்கு உச்ச வீடான மகர ராசியிலோ, செவ்வாய்க்கு நீச்ச வீடான கடக ராசியிலோ செவ்வாய் இருகும் நிலையில், ஜென்ம லக்கனத்திற்கு ஏழாமிடமாக மகர, கடக ராசிகள் அமைந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லை.

5 /8

குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ராசிகளில் செவ்வாய் இருக்கும்போது, ஜென்ம லக்கினத்திற்கு எட்டாம் இடமாகத் தனுசு, மீனம் இருந்தால் அங்காரகரின் தோஷம் கிடையாது என்று பொருள்

6 /8

சுக்கிரன் ஆட்சி ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் செவ்வாயும், ஜென்ம இலக்கினத்திற்கு 12-ஆம் இடமாக ரிஷபம், துலாம் அமைந்தால் தோஷம் இல்லை. செவ்வாய் கிரகத்தின் அதிபதியான முருகக்கடவுளை வணங்கினால் செவ்வாய் தோஷம் பாதிப்பு குறையும்

7 /8

சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் செவ்வாய் இருக்கும்போதும், சனியின் ஆட்சி ராசியான கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை. தற்போது, செவ்வாய் சிம்ம ராசிக்கு தான் பெயர்ச்சியாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிபட்டால் போதும், தொல்லைகள் நீங்கும் 

8 /8

செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும், குருவுடன் சேர்ந்திருந்தாலும், செவ்வாய் தோஷம் கிடையாது, அதேபோல, செவ்வாய் குருவால் பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை. ஆனால், நவகிரக நாயகரான சிவனை, சந்திரனை சிகையில் சூடிய சந்திரசேகரனை வழிபட்டால் தோஷங்கள் அகலும்