புதன் கிரகம் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதன் கிரகம் ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வாழ்க்கை அமைகிறது. அதிலும், புதனின் மகாதசை காலம் இருக்கும் 17 வருடங்களும் ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும்.  அறிவு, கற்றல், கலை, ஞானம் என பல விஷயங்களுக்கு அதிபதியாக இருக்கும் புதன் வலுவாக இருந்தால் வேற லெவல் என்றால், பலவீனம் அடைந்திருந்தால் வாழ்க்கையில் அனைத்து முக்கிய விஷயங்களிலும் தொங்கல் ஏற்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு குழந்தையின் கல்வி கற்கும் காலத்தில் புதன் மகா திசை இருந்தால், படிப்பில் சுட்டியாகவும் கெட்டியாகவும் இருக்கும் என்றால், அதுவே புதன் நீச்சம் அடைந்து அசுப கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், படிப்பே வராது. மனதில் வரும் சிந்தனைகளும் எதிர்மறையானதாகவே இருக்கும்.  


புதன் மகாதிசையின் போது ஆழ்ந்த அறிவு மற்றும் நினைவாற்றல் தேவைப்படும் துறைகளில் பணிபுரிபவர்கள் கோலோச்சுவார்கள் என்றால், புதன் நீசமடைந்தால், அவப்பெயர், வேலையே சுமையாக மாறுவது என அனைத்தும் மோசமாக இருக்கும்.  


புதன் மகாதிசை காலத்த்தில் மனரீதியிலான பிரச்சனைகள், நரம்பு கோளாறுகள் ஏற்படலாம். ஏனென்றால் புதன் கிரகம் ஒரு நபரின் மனம், மூளை, நரம்புகள் மற்றும் பேச்சாற்றலுக்கு அதிபதி ஆவார். எனவே புதன் மஹா திசை உங்கள் வாழ்க்கையில் மோசமாக இருந்தால், கவனமின்மை மற்றும் விஷயங்களை நினைவில் கொள்வது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நினைவாற்றல் இழப்பு மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


மேலும் படிக்க | ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!


புதன் மஹா திசை என்பது, நம்முடைய ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தசாபுத்தி நடைபெறும் காலத்தை குறிப்பதாகும். சுக்கிர திசை, ராகு திசைக்கு அடுத்தபடியாக புதன் திசைதான் அதிக ஆண்டுகள் நடைபெறுகிறது. புதன் தசை காலம் சரியாக இல்லை என்றால், ஒருவரின் செயல்பாடுகள் மந்தமாகும். பிறரிடம் இருந்து விலகியே இருப்பார். பலர் ஒன்று கூடியிருக்கும் இடத்தில் பேசுவதற்கு தயங்குவார். 


இதுவே புதன் வலுவாக இருந்து, அந்தர் திசை நடைபெற்றால், அறிவுத்திறன் மற்றும் நடத்தையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சாதாரணமாக இருப்பவர் படைப்பாற்றல் மிக்கவராக பரிணாமம் எடுப்பார்கள். வேலை, கல்வி குடும்ப விஷயம் என எதுவாக இருந்தாலும் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் ஆக்கப்பூர்வமாக மாறும். அதிலும், சுக்கிரன், சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களுடன் புதன் இணைந்தால், புதன் மகாதசை சிறப்பாக செயல்படும்.


ராசிகளின் அடிப்படையில் பார்த்தால், மிதுனம், ரிஷபம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அருமையாக இருக்கும் புதன் மகா திசை காலம், மீனம் மற்றும் மேஷ ராசிக்கு மோசமான கட்டமாக இருக்கலாம் 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி சந்திர கிரகணத்தால் மோசமாய் பாதிக்கப்படும் 4 ராசிகளுக்கு சனி பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ