சூரியன்-சனி சேர்க்கை: இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், அதிக எச்சரிக்கை தேவை!!
Shani Surya Yuti: சூரியன்-சனி சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கும்பத்தில் சனி-சூரியன் சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். தற்போது சூரியன் மகர ராசியில் இருக்கிறார். பிப்ரவரி 13, 2023 அன்று அவர் கும்பத்திற்கு மாறவுள்ளார். ஏற்கனவே சனி பகவான் கும்பத்தில் இருக்கிறார். தற்போது சூரியனும் கும்பத்திற்குள் நுழைவதால், கும்பத்தில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை இருக்கும்.
கும்பத்தில் சனி-சூரியன் சேர்க்கை அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். சூரியன்-சனி போன்ற முக்கியமான கிரகங்களின் இந்த வலுவான சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனைகளை கொடுக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் இணைவது தொல்லை தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கும்ப ராசியில் சூரியனும் சனியும் இணைவதால் இந்த ராசிகளில் பாதிப்புகள் ஏற்படும்
கடகம்:
சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தும். எனவே இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். உடல்நலம் சரியில்லாமல் இருக்கலாம். எனினும் உடல் நலனில் அக்கறை செலுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!
சிம்மம்:
சூரியனின் ராசி மாற்றம் காரணமாக, சனி சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த கூட்டணி சிம்ம ராசிக்காரர்களை தொந்தரவு செய்யக்கூடும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். சில பழைய கடனை அடைக்க வேண்டி வரும். மரியாதையை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மேலும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
கன்னி:
சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை கன்னி ராசியினருக்கு பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் இடையூறு விளைவிக்கும். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம். பண இழப்பு ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.
விருச்சிகம்:
சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் பிரச்சனை வரலாம். மன அழுத்தம் மற்றும் நோய் உங்களை தொந்தரவு செய்யலாம்.
கும்பம்:
சூரியன் சஞ்சரித்த பிறகு கும்ப ராசியில் நுழைகிறார். மேலும் இங்கு ஏற்கனவே இருக்கும் சனியுடன் அவர் இணைவார். கும்ப ராசிக்காரர்களுக்கு சனி-சூரியன் இணைவது நல்லது என்று சொல்ல முடியாது. உடல்நலம் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். ஆணவத்தைத் தவிர்க்கவும். பொறுமையை கைபிடிக்க வேண்டியது மிக அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Tamil New Year: சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ