சனி உதயம்: மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம், சனியின் அருளால் கேட்டது கிடைக்கும்

Shani Uday in March 2023: சனி உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் மிக அற்புதமாகவும் சிறப்பாகவும் அமையப் போகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2023, 04:39 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது.
சனி உதயம்: மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம், சனியின் அருளால் கேட்டது கிடைக்கும் title=

சனி உதயம் 2023: சனி பகவான் 06 மார்ச் 2023 அன்று உதயமாக உள்ளார். தற்போது சனி கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும்போது குறைவான சுப பலன்களைத் தருகின்றன. அஸ்தமன நிலையில், சனி பகவானின் ஆற்றலும் குறைகிறது. ஆனால் இப்போது சனி உதயமாகப் போகிறார். இதன் காரணமாக பல ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன. 

சனி உதயமாவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் மிக அற்புதமாகவும் சிறப்பாகவும் அமையப் போகின்றன. சனியின் உதயத்தால் அதிகப்படியான சுப பலன்களை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

சனியின் உதயத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது. உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சிறப்பான பலன்களைத் தரும். உங்கள் உறவுகள் மேம்படும். விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் வாகனம் வாங்க நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | Sankashti Chaturthi: பொங்கலுக்கு பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி சங்கஷ்டி நாள் விரதம் 

மிதுனம்

சனியின் உதயத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை முன்பை விட மேம்படும். மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். முதலீடு செய்ய இது சரியான நேரம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

தற்சமயம் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் சனியின் சஞ்சலம் நீடிப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கும் எண்னத்தில் இருந்தால், இந்த நேரம் அதற்கு மிகவும் நல்லது. தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் மிக அனுகூலமான பலன்களை அளிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பொருளாதாரத்தில் முன்பை விட அதிக முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். விவாதங்களிலிருந்து இருந்து விலகி இருந்தால் நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு ராகு சேர்க்கை, இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும், ஓவர் செலவு ஆகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News