சனி பகவானுக்கு பிடித்தமான ராசிகள்: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் ஆவார். ஆகையால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நல்ல செயல்களைச் செய்பவரை சனி ஆசீர்வதிக்கிறார். அதே சமயம் தீய செயல்களைச் செய்பவரை சனி தண்டிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்கள் சனியின் ஆசியால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் இருந்தாலும், சனியின் அருளால் அவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படாது. சனி பகவானுக்கு பிடித்தமான அந்த அதிர்ஷ்டக்கார 5 ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள்: 


ரிஷபம்


சனி பகவானின் சிறப்பு அருள் ரிஷப ராசிக்காரர்கள் மீது இருப்பதாக கருதப்படுகின்றது. ஏனெனில் இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் சனியின் நண்பன். ஆகையால் சனி தேவன் இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. ரிஷப ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்தாலும், அதன் பலன் நீண்ட காலம் நீடிக்காது.


கடகம்


சனி பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் கடக ராசிக்காரர்களுக்கு இருப்பதாக கருதப்படுகிறது. சனி அவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். கடக ராசிக்காரர்களுக்கு அவர் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறார். சனியின் அருளால் இவர்கள் இரவும் பகலுமாக உழைத்து பன்மடங்காக முன்னேற்றம் அடைகிறார்கள்.


மேலும் படிக்க | சதயத்தில் சனி பகவான்... அடுத்த 6 மாதங்களும் கடினம் தான் - கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?


துலாம்


துலாம் சனிக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ராசியில் சனி உச்சம் பெற்றுள்ளார். இவர்களுக்கு சனி பகவான் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் தருகிறார். ஏழரை நாட்டு சனியோ, சனி தசையோ அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. துலாம் ராசிக்காரர்கள் சனியின் அருளால் வாழ்வில் உயர் நிலையை அடைவார்கள். வெற்றி அவர்களின் பாதங்களை முத்தமிடும்.


மகரம்


மகர ராசியை ஆளும் கிரகம் சனி பகவான். ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் எப்போதும் உண்டு. மகர ராசிக்காரர்கள் சனியின் ஆசீர்வாதத்தால் தங்கள் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். அவர்களின் கனவுகள் அனைத்தும் நனவாகும்.


கும்பம்


சனிக்கு பிடித்த ராசிகளிலும் கும்பமும் உண்டு. இதற்குக் காரணம் கும்பம் சனியின் ராசியாகும். சனியின் அருள் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கும். இவர்கள் கடின உழைப்பின் மூலம் அதிக வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவர்களுக்கு திடீரென்று பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் எப்போதும் இருக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு உடல் நலனில் அதிக கவனம் தேவை, முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ