24 மணி நேரத்தில் குரு உதயம்: இந்த 4 ராசிகளுக்கு உயர் எச்சரிக்கை

Guru Uday in Mesh Rashi: கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்தார். தற்போது நாளை (ஏப்ரல் 27 ஆம் தேதி) இந்த ராசியில் குரு உதயமாக உள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாளை குரு உதயம் 2023: ஜோதிட பஞ்சாங்கத்தின்படி, கடந்த ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பெயர்ச்சி அடைந்தார். தற்போது நாளை அதாவது ஏப்ரல் 27 அன்று மேஷ ராசியில் குரு உதயமாகப்போகிறார். பொதுவாக குரு உதயம் சுபமாக கருதப்பட்டலும், சில ராசிக்காரர்கள் குரு உதயத்தால் கஷ்டங்கள் ஏற்படும். ஏனென்றால், இந்த நேரத்தில் பண இழப்பு, வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சினைகள் அல்லது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். எனவே குரு உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

ஏப்ரல் 27 குரு உதயம்: குரு உதயம் இந்த நேரத்தில் பண இழப்பு, வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சினைகள் அல்லது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். எனவே குரு உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /5

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனுடன், வேலை இழக்கும் அபாயம் இருப்பதால், வேலையிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம்.  

3 /5

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், வியாபாரத்தில் பண இழப்புக்கள் ஏற்படும். மேலும், அதிகப்படியான வேலை அழுத்தம் மன அழுத்தத்தை அதிகரிக்கும், இது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.  

4 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது. கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்கள் கலவையான விளைவைக் காண்பார்கள். வியாபாரத்தில் முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன் இருமுறை அல்லது மூன்று முறை யோசிக்கவும்.  

5 /5

விருச்சிக ராசி: உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதனால் இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனுடன், குடும்பத்துடனும் விவாதம் அதிகரிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.