குரு உதயம்: இன்னும் 48 மணிநேரத்துக்கு பின் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும், லாபம் பெருகும்

Guru Uday 2023: குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த உதயத்தால் அதிகப்படியான நற்பலன்களை அடைவார்கள்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2023, 07:50 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு உதயம் பதவி உயர்வு தரும்.
  • தொழிலைப் பொறுத்தவரை, இந்த நேரம் பொன்னான காலமாக இருக்கும்.
  • உங்களுக்கு அதிகப்படியான பண வரவு இருக்கும்.
குரு உதயம்: இன்னும் 48 மணிநேரத்துக்கு பின் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும், லாபம் பெருகும் title=

மேஷத்தில் குரு பகவானின் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் பெயர்ச்சியாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பிரவேசித்துள்ளார். குரு தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். ஏப்ரல் 27-ம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் உதயமாவார். பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் குரு பகவானின் உதயம் மிகவும் சுபமானதாக கருதப்படுகின்றது. இது நல்ல பலன்களைத் தரும். 

ஏப்ரல் 27 அன்று குரு பகவான் பூச நட்சத்திரத்தில் உதயமாகவுள்ளார். இது ஒரு அபூர்வமான நிலையாக பார்க்கப்படுகிறது. இது மிகவும் சுபமான ஒரு நிகழ்வாக இருக்கும். இந்த காலம் மங்களகரமான காலமாக கருதப்படுகின்றது. குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த உதயத்தால் அதிகப்படியான நற்பலன்களை அடைவார்கள்.  

பூச நட்சத்திரத்தில் குரு பகவான் உதயமானது இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும்

மேஷம்: 

குரு மேஷ ராசியில்தான் உதயமாகிறார். ஆகையால் பல விதமான சுப பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகள் உங்கள் பணியைப் பாராட்டுவார்கள். பெரிய பண ஆதாயமும் கிடைக்கக்கூடும்.

மிதுனம்: 

பூச நட்சத்திரத்தில் குரு உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு பண லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளும் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்: 

குருபகவான் உச்சம் பெறுவது கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் பலன்களைத் தரும். தொழில் தடைகள் நீங்கும். உங்கள் வேலையில் உங்களுக்கு அதிகப்படியான ஆர்வம் இருக்கும். முழுமையான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பதவி-பணம்- கௌரவம் கிடைக்கும். தொழிலிலும் வாழ்விலும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

மேலும் படிக்க | சனியால் உருவான ராஜயோகம்: 30 மாதங்கள் இந்த ராசிகளுக்கு அமோக வாழ்வு, ஏகப்பட்ட லாபம்

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு உதயம் பதவி உயர்வு தரும். தொழிலைப் பொறுத்தவரை, இந்த நேரம் பொன்னான காலமாக இருக்கும். உங்களுக்கு அதிகப்படியான பண வரவு இருக்கும். பணமும் சேரும், வேலையில் திருப்தியும் கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள்.

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்களில் லாபம் உண்டாகும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற காலமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் அமையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மே 10 வரை இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News