இந்துக்களின் வழிபாட்டில் நவக்கிரகங்கள் மிகவும் முக்கியமானவை. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என ஒன்பது கிரகங்களும் இந்துக்களின் வழிபாட்டில் முக்கியஇடம் பெற்றுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் மனித வாழ்க்கையின் போக்கினை  நிர்ணயிக்கின்ற ஆற்றல் கொண்டவை. சூரியன் ஆத்மாவையும், சந்திரன் மனதையும், செவ்வாய் மற்றும் ராகு வாக்கு வன்மையையும், வியாழன் என்னும் குரு பகவான் அறிவையும், சுக்கிரன் விருப்பம் இச்சைகளையும், சனி கிரகம் ஒருவரின் கர்மாவையும் இயக்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடக் கலைக்கு ஆணிவேராக இருப்பது  நவக்கிரகங்கள். நவக்கிரகங்களுக்கான பரிகார வழிபாடுகள் தொன்றுதொட்டு இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. சிவாலயங்களில்  நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் மையத்தில் அமைய, சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது என 8 கிரகங்களும் இடமிருந்து வலமாக வெவ்வேறு திசையைப் பார்த்து அமைக்கப்படுகின்றன. எனவே நவகிரகங்களில், நடுவில் சூரியன் நடுநாயகமாய் வீற்றிருக்க, பிற எட்டு கிரகங்களும் சூரியனை சுற்றியும் பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 


நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை?
நவகிரகங்கள் ஒன்றையொன்று பாராமல் வெவ்வேறு திசைகளில் அமர்ந்திருப்பதற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. அதற்கான விளக்கத்தை தெரிந்துக் கொள்வோம். நவ கிரகங்கள், நவகிரக நாயகரான சிவபெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.


மேலும் படிக்க | அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!


நவகிரகங்கள் தன்னுடைய கடமையில் சிறிதும் தவறுவதில்லை. எனவே, ஒருவரை மற்றொருவர் பார்த்தால், பேசிக் கொண்டால் கடமையில் தவறிவிடுவோம் என்ற எண்ணத்தில் தான் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நவகிரகங்கள் அமைந்திருக்கும் வரிசையானது ஒரு கோவிலில் மட்டும் மாறியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியாது.  


பொதுவாக எல்லா ஆலயங்களிலும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கா வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் நவகிரக மூர்த்திகள் 
ஒரே வரிசையில் அமைந்திருக்கும் கோவில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தான். நவக்கிரகங்கள் தியாகராஜப்பெருமாளின் சுட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தியாகராஜர் கோவிலுக்குள் உள்ள நவகிரகங்களுக்கு அனுக்கிரக நவக்கிரகங்கள் என்று பெயர்.



அதேபோல, திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக ஐதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் ஒரு புராணக் கதை உள்ளது. 


திருவாரூரில் நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பதற்கான காரணம்


ஒரு புராணகதையின் படி சதயகுப்தன் என்பவருக்கு சனி தோஷம் பிடிக்கும் சமயத்தில் அவர் நவக்கிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். அசுரனின் உக்ரமான போரைக் கண்டு பயந்துபோன நவகிரகங்கள், திருவாரூர் சிவளிடம் முறையிட்டன. சிவன் நவக்கிரகங்களை காப்பாற்றினார். அதன்பிறகு, சிவபெருமான், என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக் கூடாது என்று உத்தரவிட்டு நவக்கிரகங்களுக்கு அருள் பாலித்தார்.


சிவபெருமானின் உத்தரவுப்படி, அந்தக் கோவிலில் தங்களை வணங்குபவர்களுக்கு, தீம்பலன்களை குறைத்து நன்மைகளை மட்டுமே வழங்குகின்றன. அதேபோல, நளனும், சனியும் ஒரு சேர வழிபட்ட தலம் இது என்பதால் திருநள்ளாறு சென்றாலும், திருவாரூர் செல்வது கிரக தோஷங்களை குறைக்கும். 


மேலும் படிக்க | நட்பை பலப்படுத்தும் புதன்-சுக்கிரன் ஃப்ரெண்ட்ஷிப்! லட்சுமி நாராயண யோகத்தின் ஆசி பெறும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ