அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!

Good Traits Of Lord Sukran : புத்திசாலித்தனத்திற்கும், கவித்துவத்திற்கும் புதன் காரகராக இருந்தாலும், நளினமும் காதலும், அக்கறையும் கொண்டதாக கலையை வெளிப்படுத்த சுக்கிரனால் மட்டுமே முடியும். ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் இயல்பிலேயே கவித்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்

குழந்தை பாக்கியத்தைக் கொடுக்க செவ்வாய் கிரகம் முன்வந்தாலும், அதற்கான விருப்பத்தையும் மனதையும் கொடுக்க சுக்கிரனின் கடைக்கண் பார்வை அவசியம். 

1 /9

நவகிரகங்களில் சுக்கிரனுடைய சேர்க்கை இருந்தால் அல்லது அவரது ஆசி இருந்தால் தான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். அதற்கான காரணங்களை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்

2 /9

அசுர குருவான சுக்கிராச்சாரியார் தான் மனித வாழ்க்கையின் அனைத்து சுகபோக வாழ்க்கைக்கும் காரகம் வகிப்பவர் என்பதால் அவருடைய அருள் இருப்பது வளமுடன் வாழ அவசியம். 

3 /9

புதனின் அருள் இருந்தால் கல்வி கேள்வி மற்றும் கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு சுக்கிரனின் அருள் இல்லாவிட்டால், அவர்கள் குடத்தில் இட்ட விளக்கு போல பிரபலமாகமாட்டார்கள். பேச்சில் நளினமும் மற்றவர்களை கவரச் செய்யவும் சுக்கிரனால் மட்டுமே முடியும் 

4 /9

குழந்தையை தருவதற்கு குரு பகவானின் அருள் வேண்டும். ஆனால், தாம்பத்திய வாழ்க்கைக்கு மிக முக்கியமானவர் சுக்கிரன். சுக்கிரனால் கொடுக்கப்படும் இல்லற சுகம் என்பது இல்லாவிடில் குழந்தைப்பேறு தள்ளிப்போகும்

5 /9

சுக்கிரன் கிரகமும், சனி பகவானும் நண்பர்கள். சுக்கிரனும் சனியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருந்தால், சுக்கிரனால் சுபத்துவம் ஆகும் சனி, லௌகீக வாழ்க்கையிலும் பிரகாசிக்க செய்வார் ..ஒருவர் லௌகீக வாழ்க்கை வாழ்வதற்கு பணம் பொருள் அனைத்து வசதிகளும் தருபவர் சுக்கிரன். இப்படி தனது கர்மச்சக்கரத்தை இயக்க சுக்கிரனை பயன்படுத்தி, ஒருவரின் கர்மாவை இயக்க வைப்பவர் சனி

6 /9

வீடு, மனை போன்றவற்றிற்கு, செவ்வாய் காரகமாக இருந்தாலும் சுக்கிரனின் அருள் இல்லாமல் ஒருவரால் வீடுமனை வாங்க கஷ்டப்பட வேண்டும்

7 /9

சுக்கிரன் ராகு தொடர்பு இருந்தால், எதிர்பாலினத்தவரால் ஈர்க்கப்படுவார்கள், சுக்கிரன் ராகு தொடர்பு பெற்றவர்கள் பெண் தெய்வ வழிபாட்டில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்

8 /9

வசீகரம் மற்றும் அழகு என்பது சுக்கிரனால் தரப்படும் கொடையாகும். அழகுபடுத்திக் கொள்ளுதல், ஆடை ஆபரணங்கள் மீது விருப்பம் இருப்பவர்களுக்கு சுக்கிரன் நல்ல வலுவான நிலையில் இருக்கும். சிலருக்கு நான்காம் பாவகத்தில் சுக்கிரன் இருந்தாலும் அல்லது தொடர்பு பெற்றாலும் எந்த ஒரு செயலிலும் ஒரு இயல்பிலேயே நளினம் இருக்கும்

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது