புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அடுத்த ஆண்டு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்
New Year Horoscope Predictions: வரவிருக்கும் புத்தாண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புத்தாண்டு ராசிபலன்: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது. வாட்டி வதைத்த துன்பங்கள் நீங்குமா, புதிய பிரச்சனைகள் பிறக்குமா, எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா, உறவுகளின் ஆதரவு கிடைக்குமா என பலரது மனங்களிலும் பல கேள்விகள் உள்ளன. திருமணம், தொழில், ஆரோக்கியம், வேலை ஆகியவற்றில் ஆண்டு எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை பெற அனைவரும் காத்திருக்கிறார்கள்.
புத்தாண்டில் பல கிரகங்களில் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் நிகழவுள்ளன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், வரவிருக்கும் புத்தாண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெரிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் இருக்கும்
வேத ஜோதிட கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், சனி, குரு மற்றும் ராகு-கேது போன்ற பெரிய கிரகங்களின் ராசி மாற்றங்காள் காணப்படும். ஆண்டின் துவக்கத்தில், சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி இரண்டரை வருடங்கள் கழித்து கும்ப ராசியில் பிரவேசிப்பார். ஏப்ரல் மாதத்தில், மிகவும் மங்களகரமான கிரகமான குரு, மீனத்தில் இருந்து மேஷ ராசியில் நுழைகிறார். இதற்குப் பிறகு மீண்டும் அக்டோபர் மாதத்தில் ராகுவின் ராசி மாற்றம் நிகழும்.
விருச்சிகம்
2023 ஆம் ஆண்டு சனி விருச்சிக ராசியில் நான்காம் ஸ்தானத்தில் பிரவேசிப்பார். ஜாதகத்தில் நான்காம் இடம் மகிழ்ச்சி மற்றும் தாயின் ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஜோதிட சாஸ்திரப்படி, 2023-ம் ஆண்டு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது பொழியும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு நில பேரத்தில் லாபம் அதிகம் இருக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு பல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் ஆண்டில் அதாவது 2023ல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும். இதன் காரணமாக செல்வம் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
மகரம்
ஜோதிட கணக்கீடுகளின்படி, இந்த 2023 ஆம் ஆண்டில், சனி பகவான் உங்கள் ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழைவார். சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். 2023ல் சனியின் சிறப்பு அருள் உங்களுக்கு கிடைக்கும். இதனால் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு மிகவும் மங்களகரமான ஆண்டாக இருக்கும்.
மேலும் படிக்க | தனுசு ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; ‘சிலருக்கு’ பண வரவு... ‘சிலருக்கு’ பண விரயம்!
பணி இடத்தில் கௌரவமும் உயர் பதவியும் கிடைக்கும். மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆண்டு முழுவதும் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த பல முக்கிய பண்கள் தற்போது வேகமாக நடந்துமுடியும்.
மிதுனம்
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், குருபகவான் உங்கள் ராசியிலிருந்து பதினொன்றாவது வீட்டில் சஞ்சரிப்பார். ஜாதகத்தில் பதினொன்றாவது வீடு வருமானம் மற்றும் லாப ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால், 2023-ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. இவர்களின் பொருளாதார நிலை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மொத்தத்தில், குரு மற்றும் சனியின் சிறப்பு ஆசிகள் ஆண்டு முழுவதும் உங்களுக்கு இருக்கும். இந்த ஆண்டு அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Ezharai Sani: 2023 சனிப் பெயர்ச்சியால் ஏழரை நாட்டானால் துன்பப்படப்போகும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ