Ezharai Sani: 2023 சனிப் பெயர்ச்சியால் ஏழரை நாட்டானால் துன்பப்படப்போகும் ராசிகள்

Ezharai Nattu Sani: புத்தாண்டில் பொங்கல் கழிந்த உடனே வரும் ஏழரை சனியால் துன்பத்தால் மங்கப்போகும் ராசிகள்! பாதிப்பை தெரிந்து நிவாரணம் பெறவும்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2022, 07:15 AM IST
  • 2023 பொங்கலுக்கு பின் வரும் சனிப் பெயர்ச்சி!
  • துன்பத்தால் பொங்குவிருக்கும் கும்ப ராசி
  • ஏழரை சனியின் உச்சகட்டத்தில் தவிக்கப் போகும் ராசி
Ezharai Sani: 2023 சனிப் பெயர்ச்சியால் ஏழரை நாட்டானால் துன்பப்படப்போகும் ராசிகள்

Ezharai Nattu Sani: நவகிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் சனி கிரகம் ஜனவரி 17, 2023 அன்று அதன் சொந்த ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். சனி பகவனின் இந்த சனிப்பெயர்ச்சி, பலருக்கும் பல்வேறு விதமான பலன்களைக் கொடுக்கும் என்றாலும், தனது சொந்த ராசிக்கு பெயரும் சனி, சிலருக்கு அமோக வாழ்வையும், பலருக்கு கவலைகளை மத்திமமாகவும், சிலருக்கு பூதாகரமான துன்பங்களையும் கொடுக்கவிருக்கிறார். புத்தாண்டில் பொங்கல் கழிந்த உடனே வரும் ஏழரை சனியால் துன்பத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்றால், சனி யாருக்கு என்ன பாதிப்பை கொடுப்பார் என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம்.

கும்ப ராசியில் நடைபெறவிருக்கும் இந்த சனிப் பெயர்ச்சி, சொந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? ஜோதிட சாஸ்திரப்படி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. 12 ராசிகளிலும் தலா இரண்டரை வருடங்கள் தங்கி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி, மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வருகிறார். ஜனவரி 17, 2023 அன்று, சனி ஸ்வராசி 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தை வந்தடைகிறார்.

சனி கும்ப ராசியில் 2025 வரை இருப்பார். கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனீஸ்வரனால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின்இரண்டாம் கட்டம் தொடங்கும்.

மேலும் படிக்க | டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா?

ஜோதிடத்தின்படி, ஏழரை சனி உச்சத்தில் இருக்கும் இரண்டாம் கட்டம் சற்று ஆபத்தானது. ஏனெனில் மனம், பணம், உடல் ஆரோக்கியம் என வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க தேவையான அனைத்தையும் ஆட்டிப் படைக்கும். எனவே, ஏழரை சனி உச்சத்தில் இருப்பவர்கள் பரிகாரங்களை செய்து நிவாரணம் பெறலாம்.

இருந்தாலும் கும்ப ராசிக்கு அதிபதியாக இருக்கும் சனி பகவான், தனது சொந்த ராசிக்காரர்களுக்கு துன்பத்தைக் குறைத்தே கொடுப்பார். சில சமயங்களில் சுப பலன்களையும் தருவார். ஜாதகத்தில் சனி அசுப ஸ்தானத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வந்தவுடன், கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். இதுதவிர, இதுவரை அதிக செலவுகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு சற்று ஆசுவாசம் கிடைக்கும். இருப்பினும், சனியின் வக்ர அம்சத்தின் பாதிப்பும் இருக்கும். தேர்வுகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம்.

மேலும் படிக்க | கும்பத்திற்கு செல்லும் சனி: ஷஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்!!

சனிபகவான் திருமண வாழ்வில் பிரச்சனைகளை தருவார்

ஏழரை சனியின் இரண்டாம் கட்டத்தில் இருக்கும், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உறவில் மோசமான விளைவு ஏற்படலாம். திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். பேச்சைக் குறைத்துக் கொள்வதும், வார்த்தைகளை கவனமாக கையாள்வதும் நன்மையைத் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 ஜனவரி 17ம் தேதி சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளும் பரிகாரங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News