வழிபாடு என்பது வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும், எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு என்பதை தெரிந்துக் கொண்டு வணங்குவது நலம் சேர்க்கும். சனிக்கிழமையன்று சனீஸ்வரரை வணங்குவோம். சனீஸ்வரரைத் தவிர, ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரரை வணங்க வேண்டும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள் சனிக்கிழமை. விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது பெயரையே இன்றைய நாளுக்கு கொடுத்திருக்கும் சனி பகவான், அசுப கிரகம் என்று நம்பப்படுகிறது. உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், மண்ணீரல், காது முதலானவை சனியைக் குறிக்கும். சிறுநீரகக் கோளாறு, பாதத்தில் உண்டாகும் நோய், குஷ்டம், வலிப்பு முதலானவை சனியால் ஏற்படக்கூடியவை என்பது ஜோதிட சாஸ்திரங்களின் கணிப்பு.


மேலும் படிக்க | மன்னிக்க மனமில்லாதவர்களின் மன நிம்மதியை சொல்லும் ஜாதகம் 


ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனீஸ்வரரின் தந்தை சூரிய பகவான். நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் சனீஸ்வரருக்கு அர்க்கஜா அதாவது சூரியபுத்திரன் என்றும், தனது தாயின் பெயரால் சாயாபுத்திரன் என்றும் பட்டப்பெயர்கள் உண்டு.
சனி கிரகத்தால் நேரிடும் கஷ்டங்களுக்கு பரிகாரமாக ஒரு ஸ்லோகம் இருக்கிறது. 


கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ
ரெளத்ராம்தகோ யம;


ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந; 



என்ற சுலோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொண்டால், வாழ்வில் வளம் பெறலாம். அதிலும் சனிக்கிழமையான இன்று இந்த சுலோகத்தைச் சொல்லி வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்.


சனீஸ்வரர், அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் ஆக்கும் வல்லமை பெற்றவர். நீதியின் கடவுளும், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவருமான சனி பகவானின் ஆசி கிடைத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் நிறைந்திருக்கும். ஆனால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை சீரழித்துவிடும்.


மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


அதிலும் சனி தோஷம், சனி மகாதசை, ஏழரை நாட்டு சனி போன்றவை மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. எனவே, சனி பகவான் மனம் மகிழும்படியாக பிரார்த்தனை செய்வது நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும்.


அதேபோல், தினமும் காகத்துக்கு உணவிடுவதும், எள் தீபமேற்றி வழிபட்டால் கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்யும்.   அதே போல, உளுந்து வடையை காகங்களுக்கு கொடுப்பதும் நன்மை பயக்கும். சனிக்கிழமைகளில் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். அனுமாரை வணங்கினால், சனீஸ்வரரின் அருள்கிடைக்கும்.


சனி பிரதோஷத்தன்று சிவனை வழிபடுவதும், வன்னி மரத்தை வணங்குவதும் நல்லது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ