மதுரை ஆடி மாத திருவிழா: வருடத்தில் ஒருமுறை மட்டுமே தரிசிக்கக்கூடிய வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி அம்மனின் தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் பண்டிகைகளால் நிறைந்த மாதம். வரலட்சுமி விரதம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் உற்சவங்களும் திருவிழாக்களும் தொடர்ங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே தனியாக நடத்தப்படும் இத்திருவிழா, கடந்த 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வழக்கமாகவே, திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மன் யானை, நந்தி, அன்னம், பூத வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலையிலும் இரவு நேரங்களில் கோவில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் படிக்க | ஸ்ரீவரலட்சுமி விரத கொழுக்கட்டை... எளிதாய் செய்ய சில டிப்ஸ்
ஆடி முளைக்கொட்டு விழாவின் 6ம் நாளான நேற்று மீனாட்சியம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் கோவில் விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்ககூடிய கிளி வாகனைத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்துக்கீரிடம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி, வைர வைடூரிய நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை திரளான பக்தர்கள் வணங்கினர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், இந்த ஆண்டு (2022) ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் நேற்று 04.08.2022 மாலை வெள்ளி கிளி வாகனத்தில் அன்னை மீனாட்சி வலம் வந்து மக்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.
மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ