Sukran Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் செல்வம், பெருமை, மகிழ்ச்சி, அமைதி, பேச்சாற்றல், அறிவாற்றல், உலக இன்பம், செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரமமாக உள்ளார்.  ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், ​​அந்த நபர் உலக சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறார். அவருக்கு உலகின் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை நன்றாக இல்லை என்றால் அந்த நபர் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடுகிறது.


இன்னும் 4 நாட்களில், அதாவது மே 27, 2024 திங்கட்கிழமையன்று, சுக்கிரன் மதியம் 12:04 மணிக்கு ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். ரோகிணி நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழையும் போது எந்தெந்த ராசிக்காரர்கள் (Zodiac Signs) கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


ரிஷபம் (Taurus)


ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கும். இந்தக் காலகட்டத்தில் தொழில் சம்பந்தமான சில அசுபச் செய்திகள் வரலாம். தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு படிப்பதில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். மனதில் ஏமாற்றம் இருந்து கொண்டே இருக்கும். சில விஷயங்களில் டென்ஷன் அதிகரிக்கலாம். அக்கம்பக்கத்தினருடன் சில விஷயங்களில் வாக்குவாதம் ஏற்படலாம். மனம் கலக்கத்துடன் இருக்கும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகலாம். வேலை செய்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். வேலையில் கவனக்குறைவு ஏற்படலாம். 


மேலும் படிக்க | திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?


கடகம் (Cancer)


கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சாதகமற்றதாக இருக்காது. பணியிடத்தில் நஷ்டம் ஏற்படலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள். இல்லையெனில் நிதி நெருக்கடி ஏற்படலாம். இருப்பினும் சில வழிகளில் சுக்கிரனின் ராசி மாற்றம் சுப பலன்களையும் தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். மன அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. 


சிம்மம் (Leo) 


வேத ஜோதிடத்தின் படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக இருக்காது. வேலை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் மனம் கலங்கிக்கொண்டே இருக்கும். வேலையை விட்டு நீக்கப்படும் நிலை கூட வரலாம். மன அழுத்த சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களின் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். ஆனால், சுக்கிரனின் ராசி மாறுதலுக்குப் பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம்.. செல்வம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ