Venus Transit: ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. கிரகங்களின் ராசி, நட்சத்திரம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் ஆகிய மாற்றங்களின் போது, மனிதர்களின் வாழ்விலும் அந்தந்த கிரகங்களுக்கான அம்சங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றங்களை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கிறோம். கிரக பெயர்ச்சிகள் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, வளமை, வாகனம், கலை, பணம், வசதி, பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் அடுத்த மாதமான மார்ச் மாதத்தில் இரண்டு முறை தன் ராசியை மாற்றவுள்ளார். முதலில், சுக்கிரன் மார்ச் மாத முதல் வாரத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைவார். அதன் பிறகு மாதத்தின் கடைசி நாளில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். 


மார்ச் மாதத்தில் சுக்கிரன் இரு முறை ராசி மாறுவது வியாபாரம் மற்றும் வர்த்தகத்திற்கு மிக ஏதுவாக கருதப்படுகின்றது. சுக்கிரனின் இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த இரட்டை மாற்றத்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அதிகப்படியான லாபம் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு சுப யோக பலன்கள்


ரிஷபம் (Taurus)


மார்ச் மாதம் இரு முறை சுக்கிரன் பெயர்ச்சி ஆவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் மற்றும் லட்சுமி அன்னையின் அருளால் பொருளாதார நிலை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். பணி இடத்தில் பல நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் பணத்தை சேமித்து வைப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 


சிம்மம் (Leo)


சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சியின் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நிதி நிலை முன்னேறும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலம் சுக்கிரன் அருளால் மாணவர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் தாக்கத்தால் காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். முன்னர் செய்திருந்த முதலீடுகளால் இப்போது லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். 


மேலும் படிக்க | உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொடவைப்பார் சனி: 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலம்


தனுசு (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம், இவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்க்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், அலுவலகத்தில் பணிபுரியும் சூழல் நன்றாக இருக்கும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 


கும்பம் (Aquarius)


சுக்கிரனின் இரட்டை பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் பல சுப பலன்களை உண்டாக்கும். இப்பொது நிதி நிலை நன்றாக இருக்கும். முதலீடு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் தற்போது அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பெரிதும் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். 


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | வருமானம் பெருகும் நாள்! மனதிற்கினியவர்களை சந்திக்கப் போகும் 2 ராசிகள்! இன்றைய தினபலன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ