வருமானம் பெருகும் நாள்! மனதிற்கினியவர்களை சந்திக்கப் போகும் 2 ராசிகள்! இன்றைய தினபலன்!

Daily Rasipalan: பிப்ரவரி மாதம் 23ம் நாளான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? என்பதை தேரிந்துக் கொண்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2024, 05:50 AM IST
  • விழிப்புணர்வு என்றும் நல்லது
  • பெரியவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவும்
  • மனதிற்கு பிடிக்காத வேலை செய்யவேண்டாம்
வருமானம் பெருகும் நாள்! மனதிற்கினியவர்களை சந்திக்கப் போகும் 2 ராசிகள்! இன்றைய தினபலன்!

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? என்பதை தேரிந்துக் கொண்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள். பிப்ரவரி மாதம் 23ம் நாளான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

Add Zee News as a Preferred Source

23-02-2024 தமிழ் ஆண்டு சோபகிருது, மாசி 11 ராசி பலன்கள்

மேஷம்
அரசு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும்.  

ரிஷபம்
கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். 

மிதுனம்
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல் உண்டாகும். வெளியூரிலிருந்து சாதகமான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  

கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.  

மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...

சிம்மம் 
மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி பேசும் மக்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  

கன்னி 
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பொறுப்பு மேம்படும்.  வரவுகளால் சேமிப்பு மேம்படும்.  

துலாம்
உயர் அதிகாரிகளிடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கனிவான பேச்சுகளின் மூலம் ஆதரவு மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். 

விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் சிறு சிறு தாமதம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும்.   

மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!

தனுசு
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுப செயல்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். 

மகரம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்துச் செயல்படவும்.

கும்பம் 
பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். 

மீனம் 
புதிய முயற்சிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.  சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.  புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும்.  

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி... பாடாய் படுத்தும் சனி பகவானை மகிழ்விக்க ‘சில’ எளிய பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News