சனியின் ராசியில் நுழையும் புதன்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், செல்வச்செழிப்பு
Budh Gochar 2023: சனியின் ராசியான கும்ப ராசியில் புதன் கிரகம் நுழைவதால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் சில ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரகங்களின் மாற்றத்தால் உருவாகும் ராஜயோகம்: ஒவ்வொரு மாதமும் பல பெரிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. பிப்ரவரி மாதத்திலும் பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றியுள்ளன. மாதத்தின் தொடக்கத்திலேயே புதன் பெயர்ச்சியாகிவிட்டது. மேலும் பிப்ரவரி 27 ஆம் தேதி மீண்டும் புதன் கும்ப ராசிக்குள் நுழைவார். சனி பகவானின் ராசியில் புதன் கோச்சாரம் செய்வது ராஜயோகத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உருவாகும் இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இதனால் குறிப்பிட்ட நற்பலன்கள் கிடைக்கும்.
சனியின் ராசியான கும்ப ராசியில் புதன் கிரகம் நுழைவதால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் சில ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்
2023-ம் ஆண்டு கும்ப ராசியில் உருவாகும் இந்த ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு குறிப்பாக பலன் தரும். இந்த யோகத்தால் இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். இதுமட்டுமின்றி மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பது சுப பலன்களைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், உங்கள் எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இதுமட்டுமின்றி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். அவர்களது ஆதரவும் கைகூடும்.
மேலும் படிக்க | மகா சிவராத்திரி ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை!
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சுப பலன்களைத் தரப்போகிறது. சுப பலன்களால் இவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவார்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் முடியும் நேரம். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை மற்றும் சட்ட விஷயங்களில் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இந்த நேரத்தில் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
கன்னி
ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கக்கூடும். இதுமட்டுமின்றி, உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் தொழிலில் பதவி உயர்வு பெறலாம்.
இந்த ராஜயோகம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் கன்னி ராசியில் உள்ள வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
மகரம்
கும்ப ராசியில் புதனின் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். இதனுடன் சமூக மட்டத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் முதலீடு செய்ய ஏதேனும் திட்டம் செய்திருந்தால், அதை இந்த காலகட்டத்தில் செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீட்டின் லாபம் நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். கணவன் / மனைவி குழந்தைகளுடம் ஆனந்தமான நேரத்தை செலவிடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இந்த காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ