புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வியாபாரத்தில் லாபம், படிப்பில் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி

Budh Gochar in February: புதனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2023, 11:35 AM IST
  • மகர ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சிறந்த, மற்றவர்களை ஈர்க்கக்கூடிய பேச்சாற்றல் உள்ள தொழிலதிபர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
  • பிறரை புண்படுத்தும் எந்த வேலையையும் செய்யாதீர்கள்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வியாபாரத்தில் லாபம், படிப்பில் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி title=

புதன் பெயர்ச்சி 2023: புதன் கிரகங்களின் ராஜகுமாரனாக கருதப்படுகிறார். புதன் கிரகம் தற்போது மகர ராசியில் இருக்கிறார். வரும் பிப்ரவரி 27 அன்று மாலை அவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். புதனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும், புதனின் மாற்றத்தால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சிலர் கவனமாகவும், ஆரோக்கியத்தில் அதிகப்படியான அக்கறையுடனும் இருக்க வேண்டும். 

புதனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம்:

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கடன் திட்டமிடலை புரிந்து கொண்டு செய்தால், சாதகமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்டு உழைத்தால் நல்ல லாபம் பெறலாம். இது அதிக லாபம் அடைவதற்கான காலம். புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டால் இந்த காலத்தில் நல்ல ஏற்றம் காணலாம்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நன்மை தரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள், வேலை செய்யும் விதத்தில் அழகையும் நேர்த்தியையும் கொண்டு வர முடியும். புதிய உத்திகளை பயன்படுத்தி வியாபாரம் செய்தால், அதிகப்படியான நன்மைகளை இந்த காலத்தில் அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க | பணவரத்து இருந்தாலும் எப்போதும் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் ராசிகள் 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரைத் தொழில் செய்து வருபவர்கள், அதை முன்னெடுத்துச் செல்ல கடினமாக உழைக்க வேண்டி வரும். அப்போதுதான் முன்னேற்றம் ஏற்படும். இது முன்னேற்றத்திற்கான நேரம். ஆனால், உங்கள் முன்னேற்றத்துக்கான சாவி உங்கள் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்வது மிக அவசியமாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கைத் துணை பணியில், வியாபாரத்தில் வெற்றி பெற, அவர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். வேலைகளைத் திட்டமிடுவதில் அவர்களுக்கு ஆதரவளிக்கலாம். நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவராக இருந்தால், புதிய நபருடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் நோய்கள் குறித்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடனில் இருந்து விலகி இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றியைப் பெற முடியும். எனவே கடின உழைப்பிலிருந்து பின்வாங்க வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் மூளையை கூர்மைப்படுத்த வேண்டும். படிக்கும் மாணவர்கள் தவம் போல் நினைத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பதற்காக அல்லது படித்தவற்றை மீண்டும் ரிவைஸ் செய்ய அதிகாலை வேளை சிறந்தது. தந்தை மற்றும் தாத்தாவின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களை மதிப்பது நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த, மற்றவர்களை ஈர்க்கக்கூடிய பேச்சாற்றல் உள்ள தொழிலதிபர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பிறரை புண்படுத்தும் எந்த வேலையையும் செய்யாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அழகு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ஆளுமையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இதுவரை வாய்ப்புகளை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், இப்போது நீங்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். புதனின் ராசி மாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளித் தரும். ஆகையால், இதை பயன்படுத்திக்கொண்டால் நற்பலன்களை அடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News