குரு பெயர்ச்சி 2023: சில ராசிகளுக்கு சந்தோஷம், சிலருக்கு சஞ்சலம்-முழு ராசிபலன் இதோ

Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் ​​சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2023, 06:50 PM IST
  • ரிஷப ராசிக்காரர்கள் அனைவரிடமும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பழகுவது அவசியம்.
  • ஏற்கனவே சேமிக்கப்பட்ட பணம் இந்த நேரத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • இனிவரும் காலங்களில் புதிய பணிகள் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2023: சில ராசிகளுக்கு சந்தோஷம், சிலருக்கு சஞ்சலம்-முழு ராசிபலன் இதோ  title=

குரு பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் மூன்று முக்கிய ராசி மாற்றங்கள் நிகழவுள்ளன. இதில் சனியின் முதல் ராசி மாற்றம் ஜனவரி மாதம் நடந்த நிலையில் தற்போது இரண்டாவது ராசி மாற்றம் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. ஏப்ரல் மாதத்தில், தேவ குரு வியாழன் மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இதன் பிறகு அக்டோபர் மாதத்தில் ராகு-கேது கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும்.

ஏப்ரல் 22 ஆம் தேதி, வியாழன் மீனத்திலிருந்து வெளியேறி, செவ்வாயின் ராசியான மேஷத்திற்குச் செல்கிறார். மேலும் மே 1, 2024 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். மேஷ ராசியில் கோச்சாரம் ஆன பிறகு, குரு பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி வக்ர நிலைக்கு மாறுவார். அதன் பின்னர் டிசம்பர் 31 ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழவுள்ள குரு பெயர்ச்சி அஸ்தமன நிலையில் நடக்கும். ஏனெனில், குரு மார்ச் 31, 2023 இல் அஸ்தமனமாகி, அதன் பிறகு ஏப்ரல் 30 அன்று உதயமாவார். இதற்கிடையில், ஏப்ரல் 22 அன்று குரு பகவான் தனது ராசியை மாற்றுவார்.

குரு பெயர்ச்சி 2023: சிறப்பு என்ன? 

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் கிரகத்திற்கு தனி இடம் உண்டு. அறிவு, குழந்தைகள், கல்வி, சமயப்பணி, தொண்டு, செல்வம், அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி குருவின் ராசி மாற்றம் மிகவும் விசேஷமானது, ஏனெனில், இது 2023-ம் ஆண்டின் மிகப்பெரிய ராசி மாற்றமாகும். மேலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். 

வியாழன் தனது ராசியை சுமார் 13 மாதங்களில் மாற்றினாலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தற்போது மேஷ ராசிக்குள் நுழைவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிப்பது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் ​​சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும். மேஷ ராசியில் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியால், அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி காணலாம். 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அதீத பணிச்சுமை அதிகரிக்கும். ஆகையால் உங்கள் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் வேலையை முடிக்க அவசரப்படுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் அனைவரிடமும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பழகுவது அவசியம். ஏற்கனவே சேமிக்கப்பட்ட பணம் இந்த நேரத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இனிவரும் காலங்களில் புதிய பணிகள் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

மிதுனம்: குரு 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு உங்களுக்கு வருமானம் தரும் ஸ்தானமாக உள்ளது.  குருவின் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரித்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வருமானத்தைப் பொறுத்தவரை, மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். கடக ராசிக்காரர்களின் காதல் உறவு வலுவக இருக்கும். பயண வாய்ப்புகள் உருவாகும். பயணங்களால் நன்மை ஏற்படும். 

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன்! சில ராசிகளுக்கு சஞ்சலம்... சில ராசிகளுக்கு சந்தோஷம்!!

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நன்மை பயக்கும். திடீர் பண வரவு கூடும்

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு இது நல்ல நேரம். கூட்டுத் தொழில் நன்மை பயக்கும். அன்பான வாழ்க்கை நடத்துபவர்களின் வாழ்க்கையில் இணக்கம் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். இந்த காலம் முதலீட்டிற்கு சாதகமாக இருக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். உணவில் கவனம் செலுத்தினால் உடல் நலம் சரியாக இருக்கும்.

விருச்சிகம்: வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்கள் ஏற்படலாம். ஆகையால் வேலைக்கும் இல்லற வாழ்க்கைக்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும். ஊடகம் மற்றும் பதிப்பகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

தனுசு: குரு தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் மாற்றும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், தடைபட்ட வேலைகளும் முடிவடையும். பயணம் செல்லும்போது சுப நேரம் பார்த்த பிறகே வீட்டை விட்டு வெளியேறவும். செப்டம்பர் 4ம் தேதிக்கு பிறகு நல்ல நேரம்.

மகரம்: உங்கள் வேலையில் முழு கவனத்துடன் செயல்படுங்கள். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பணத்தைச் சேமிப்பதில் மனைவியும் உறுதுணையாக இருப்பார். இந்த காலத்தில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சுபமாக இருக்கும். நோய், கடன், எதிரி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும். குருவின் பார்வை உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவுவதோடு, அனைத்து வேலைகளிலும் குருவால் சுப பலன்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் மாதம் சனி உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது கைகூடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News