குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை... சுப யோகம் ஆரம்பம்
Guru Nakshatra Peyarchi: குரு நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் பம்பர் லாபம் கிடைக்கும்.
Guru Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரம் பல வித அற்புதங்களையும், கணக்கீடுகளையும், ரகசியங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. கிரகங்களின் நிலைகள், இயக்கங்கள், மாற்றங்கள் ஆகியவற்றை பொறுத்து இதில் பல நிகழ்வுகள் கணிக்கப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமான கணிப்புகளாக இருக்கின்றன. ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.
குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும்
ராசிகள் மட்டுமல்லாமல் கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கிரகங்களில் சனியும் குருவும் மிக முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. குரு பகவான் சுமார் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். தற்போது அவர் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் உள்ளார். மே 1 ஆம் தேதி அவர் பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்குள் நுழைவார்.
குரு நட்சத்திர பெயர்ச்சி
இது தவிர குரு அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். ஜோதிட கணக்கீடுகளின் படி, அவர் தற்போது, சதய நட்சத்திரத்தில் இருக்கிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவார். இந்த நட்சத்திரத்தில் அவர் அக்டோபர் 3 ஆம் தேதி வரை இருப்பார். குருவின் இந்த நட்சத்திர மாற்றத்தின் (Guru Nakshatra Gochar) தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் பம்பர் லாபம் கிடைக்கும். இவர்கள் செல்வச் செழிப்பில் திளைப்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம் (Gemini)
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சி பல வித நன்மைகளை அள்ளித் தரும். சொந்த தொழில் செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். இத்தனை நாட்களாக இருந்து வந்த தடைகள் இப்போது நீங்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். இந்த காலத்தில் கடக ராசிக்காரர்கள் சேமிப்பில் கவனம் செலுத்தலாம். வருவாய் அதிகரிப்பதால் சேமிப்பும் அதிகமாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். பங்குகள் மற்றும் லாட்டரி மூலம் லாபம் காணலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
சிம்மம் (Leo)
குருவின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் வகையில் இருக்கும். நீண்ட காலமாக நடக்காமல் முடங்கிக்கிடந்த பல பணிகளை இப்போது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பிற்கான பலன் இப்போது கிடைக்கும். வெளிநாடு செல்லும் ஆசையில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். மாணவர்களுக்கு உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த காலத்தில் தந்தை மற்றும் குருவின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதை அதிகரிக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ