அன்னை மகாலட்சுமிக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு எல்லாம் கிடைக்கும், எப்போதும் கிடைக்கும் - உங்களுக்கு எந்த ராசி?

Favourite Zodiac Signs of Goddess Mahalakshmi: ஜோதிட கணக்கீடுகளின் படி, அன்னையின் அருளை பெறுவதில் சில ராசிக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மீது எப்போதும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2024, 12:00 PM IST
  • கடக ராசிக்காரர்கள் பொதுவாகவே அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள்.
  • இவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் மகத்தான வெற்றி பெறுகிறார்கள்.
  • கடக ராசியில் பிறந்த பெண்களின் அதிர்ஷ்டம் மிகவும் வலுவானது.
அன்னை மகாலட்சுமிக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு எல்லாம் கிடைக்கும், எப்போதும் கிடைக்கும் - உங்களுக்கு எந்த ராசி? title=

Favourite Zodiac Signs of Goddess Mahalakshmi: மனிதர்களாகிய நாம் அனைவரும் நம் வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி ஆகியவை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம், என்றும் நாம் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்கு அயராத உழைப்பு, அந்த உழைப்பினால் கிடைக்கும் செல்வம், அந்த செல்வத்தை பெருக்கும் திறன், செல்வத்தை வைத்து பாதுகாக்கும் பொறுமை, பிறருக்கு கொடுத்து உதவும் மனது என இவை அனைத்தும் தேவை. செல்வம் நம் வாழ்வில் நிலைத்திருக்க நாம் செல்வச்செழிப்பை அளிக்கும் அன்னை மகாலட்சுமியை வணங்குகிறோம். 

மகாலட்சுமி (Goddess Mahalakshmi) செல்வம், பண வரவு, செழிப்பு, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றை நமக்கு அளிக்கும் தெய்வமாக உள்ளார். அன்னையின் கடைப்பார்வை நம் மீது பட்டால்கூட, நமக்கு வாழ்வில் எந்த குறையும் ஏற்படாது. அன்னையில் அருள் பெற்ற ஒருவர் வாழ்நாள் முழுதும் செல்வச்செழிப்பில் திளைக்கிறார். ‘இல்லை’ என்ற நிலையே அவருக்கு இல்லாமல் போய்விடும். அவருக்கு வாழ்வில் தேவைகள் அனைத்தும் உடனடியாக பூர்த்தியாகும். லட்சுமி அன்னை நமக்கு பணத்தை அளிப்பதுடன், அதை வைத்து தேவையில் இருப்பவர்களுக்கு, நலிந்தோருக்கும் உதவும் நற்பண்பையும் அளிக்கின்றார். 

லட்சுமி அன்னைக்கு பிடித்த ராசிகள்

அன்னையாக இருக்கும் ஒருவரால் பாரபட்சம் காட்ட முடியாது. அன்னை மகாலட்சுமியும் தன் குழந்தைகளுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதில்லை. அனைவரும் அவர் பிள்ளைகளே. எனினும், ஜோதிட கணக்கீடுகளின் படி, அன்னையின் அருளை பெறுவதில் சில ராசிக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் மீது எப்போதும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் லட்சுமி அன்னைக்கு மிகவும் பிடித்தவர்களாக கூறப்படுகின்றது. இவர்கள் வாழ்வில் எப்போது செல்வமும் செழிப்பும் நிறைந்திருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 

1. ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், கடின உழைப்பாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். அன்னை லட்சுமியின் அருளை பொறுத்தவரை இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தங்கள் கடின உழைப்பால் தொழிலில் வெற்றி பெறுவார்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு அன்னையின் அருளால் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும். இதனால் வாழ்வில் பயனடைவார்கள். இவர்களுக்கு எப்போதும் குடும்பத்தில் தனி மரியாதை இருக்கும்.

மேலும் படிக்க | Maasi Magam: முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் கிடைத்த நாள்! மாசி மகத்தின் பெருமை தெரியுமா?

2. கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்கள் பொதுவாகவே அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். கடக ராசியில் பிறந்த பெண்களின் அதிர்ஷ்டம் மிகவும் வலுவானது. இவர்களுக்கு லட்சுமி அன்னையின் விஷேஷ அன்பு இருப்பதால், இவர்களது பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் இவர்களால் செல்வம் சேரும். இவர்கள் பணி புரியும் இடத்திலும் வேகமாக உயர் பதவியை பெற்று விடுவார்கள். இவர்கள் பெயரில் வியாபாரம் செய்தால், அதில் பலமான லாபம் காணலாம். 

3. தனுசு (Sagittarius)

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இவர் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். குரு அருள் மற்றும் லட்சுமி அன்னையின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்போதும் பண வரவு இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு அன்னையின் அருள் இருப்பதால், வாழ்வில் எந்த குறையும் ஏற்படாது. தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் செல்வச்செழிப்பில் மிதப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு லட்சுமி அன்னையின் சிறப்பு அருள் எப்போதும் கிடைக்கிறது. 

4. மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் விசேஷ அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் அன்பாகவும், கனிவான உள்ளத்துடனும் இருப்பார்கள். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ஷ்டசாலிகளாக திகழ்வார்கள். லட்சுமி அன்னையின் அருளால் ஏழ்மை இவர்களிடம் நெருங்க முடியாது. இவர்களது குடும்பம் மகிழ்ச்சியிலும் செழிப்பிலும் திளைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் அதிருப்தியோ ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்பில்லை. இவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சியும் செல்வமும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் உயர் பதவியைப் பெறுவார்கள். 

மேலும் படிக்க | சனி உதயம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.... அள்ளிக்கொடுப்பார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News