2022 சஃபல ஏகாதசி: ஏகாதசி விரதம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது என்றால், மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன மாதவனுக்கு மிகவும் உகந்தது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசிகள். இன்று (2022 டிசம்பர் 19)  மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி, இதனை சஃபல ஏகாதசி என்று அழைப்பார்கள். இன்று விரதம் இருந்து பழங்களை தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டும் இந்த விரதத்தை இருக்கலாம். ‘சஃபல்’ என்ற சொல்லுக்கு ‘வெற்றி’ என்று பொருள். இன்று விரதம் இருப்பவர்களுக்கு, வாழ்க்கையில் வெற்றி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கும். செய்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைப் பெற்றுத்தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தினத்தில் ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் சஃபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதும், விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதும் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கச்செய்யும். 


சஃபல ஏகாதசி விரதத்தை எந்த ஒரு பக்தனும் முழுமையான  பக்தியுடன் கடைப்பிடித்தால், அவர் பரமபதம்  அடைவார் என்பது புராணங்களில் விளக்காமாக கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கவலையை கைவிடுங்கள் கன்னி ராசிக்காரரே! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்


முன்னொரு காலத்தில் சம்பவதி நகரில் மகிஷ்மத் என்ற கம்பீரமான அரசன் இருந்தார். அவரது நான்கு மகன்களில் மூத்தவனான லும்பக் மிகவும் கொடூரமானவனாக இருந்தான். 


இதனால் மிகவும் வருத்தமடைந்த மன்னர் மகிஷ்மத், தனது மகன் லும்பக்கை நாடு கடத்தி விட்டார். நாடு கடத்தப்பட்டாலும் லும்பக் தனது கெட்ட பழக்கங்களை கைவிடவில்லை. காடுகளில் அலைந்து திரிந்த லும்பக, 3 நாட்கள் பட்டினியாக  திரிந்துகொண்டிருந்த போது, ஸஃபல ஏகாதசியன்றும் ஒன்றும் சாப்பிடவில்லை. 


ஆனால், லும்பகின் அதிர்ஷ்டம், அந்த ஏகாதசிக்கு பிறகு, ஒரு துறவியின் குடிசைக்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஏகாதசி விரதத்தை முடிக்கும் நிலையில் இருந்த முனிவர், ஒன்றும் சாப்பிடாமல் கொலைப் பட்டினியில் இருந்த லும்பக்குக்கு உணவு அளித்தார். 


மேலும் படிக்க | தனுசு ராசியில் சூரியன்; இந்த ‘6’ ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்! 


ஏகாதசியில் விரதம் இருந்ததும், துவாதசியில் பிரசாதமாக முனிவர் அளித்த உணவை சாப்பிட்டதும், லும்பக்கின் மனதில் அமைதி தோன்றியது, தனது தவறுகள் தெரிந்தது. தனது மாற்றத்துக்கு காரணம் என்னவென்று முனிவரிடம் விசாரித்தபோது, அவர் சஃபல ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விவரித்தார்.


மனம் தெளிந்த நிலையில் இருந்த லும்பக் முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மனம் திருந்திய லும்பக்கை முனிவர் தனது சீடராக்கிக்கொண்டாராம்.


சஃபல ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம்,  செய்த பாவங்கள் அனைத்தும் மறைவதுடன், நல்ல வாழ்வு வாய்க்கும் என்றும், சஃபல ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு விஷ்ணு லோகம் கிடைக்கிறது என பிரஹ்மாண்ட புராணம் தெரிவிக்கிறது. 


மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டின் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்!! 


இந்த ஆண்டு சஃப்ல ஏகாதசி 19 டிசம்பர் 2022 அன்று வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மார்கழி தேய்பிறை ஏகாதசியன்று ஒரே நேரத்தில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன.


புதாதித்ய யோகம், லக்ஷ்மி நாராயண யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகியவற்றின் காரணமாக, சஃபல ஏகாதசியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது பல மடங்கு பலன்களை தரும்.


மேலும் படிக்க | பொங்கலை புத்துணர்ச்சியுடன் வரவேற்க அருள் புரியும் புதாதித்ய யோகம்! 3 ராசிக்கு ஜாக்பாட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ