பிறக்கும் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான வரவேற்பு அளிக்கும்! புத்தாதித்ய ராஜயோகத்தால் அபரிமிதமான செல்வத்தைப் பெற்று நிம்மதியாய் வாழப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும்.
கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தால் அனுகூலமான விளைவுகளை பெறுகிறார்கள். சில ராசிக்காரர்கள் இன்னல்களை சந்திக்கிறார்கள்.
கிரகங்களின் அரசர் என்று சொல்லப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசன் புதனும் இணைந்து தனுசு ராசியில் புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறார்கள். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு அற்புதமான வரவேற்பு அளிக்கும்! புத்தாதித்ய ராஜயோகம் அபரிமிதமான செல்வத்தைப் பொழியும்.
மேலும் படிக்க | புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி: அவதியில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான், பரிகாரங்கள் இதோ
தனுசு ராசியில் புத்தாதித்ய ராஜ்யோகம் என்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. புதாதித்ய ராஜயோகம் ஒருவருக்கு மகத்தான எல்லா விதங்களிலும் வெற்றியைப் பெற்றுத்தரும். வெற்றி, செல்வம், மரியாதை, சமூக அந்தஸ்து மற்றும் அனைத்தையும் தருகிறது. 2022 டிசம்பரில், சூரியனின் சஞ்சாரம் மற்றும் புதன் சஞ்சாரம் காரணமாக புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.
எனவே, இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இறுதியையும், 2023-ம் ஆண்டின் தொடக்கத்தையும் அற்புதமாக மாற்றும். புதாதித்ய ராஜயோகம் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறது தெரியுமா?
ரிஷபம்: புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களை கொண்டு வரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வேலை மாறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பதவி உயர்வு ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய ஒப்பந்தம் இறுதியாகலாம். நோயிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியம் மேம்படும், இது உங்கள் வாழ்க்கையில் புதிய ஆற்றலைப் புகுத்தும். உங்கள் மனதில் நிம்மதி அதிகரிக்கும்.
மேலும் படிக்க | தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாதித்ய ராஜயோகம் அபரிமிதமான பலன்களைத் தரும். குறிப்பாக இந்த நேரம் குடும்ப வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணை அல்லது காதல் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது நன்மை பயக்கும்.
கும்பம்: புதன் மற்றும் சூரியனின் சஞ்சாரத்தால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம், கும்ப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வருமான அதிகரிப்பு உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். பழைய கடனை அடைப்பீர்கள். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். குடும்பம் மற்றும் சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். நீங்கள் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Venus Dosh: பேர் மட்டும் தான் லட்சுமி நாராயண தோஷம்! உஷராக இருக்க வேண்டிய ‘3’ ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ