2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டின் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்!!

New Year Horoscope: 2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை? அவர்களுக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 12:59 PM IST
  • 2023 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
  • ஜனவரி மாதத்திற்குப் பிறகு உங்கள் நல்ல நேரம் தொடங்கும்.
  • மேலும் உங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு பெரிய நன்மைகளைத் தரும்.
2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டின் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்!!

புத்தாண்டு 2023 ராசிபலன்: 2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. புதிய ஆண்டு, தன்னுடன் புதிய கனவுகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய ஆசைகள், புதிய விருப்பங்கள் என அனைத்தையும் தன்னுடன் கொண்டு வரும். அடுத்த ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்குமா இல்லை ஆதங்கத்தை தருமா என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வரவிருக்கும் புதிய ஆண்டில் பல முக்கிய கிரக மாற்றங்களும் நிகழவுள்ளன. வருடாந்திர ஜாதகப்படி 2023-ம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையப் போகிறது. 

2023-ம் ஆண்டு 5 ராசிக்காரர்களுக்கும் பதவி, பணம், கௌரவம் என அனைத்தையும் அள்ளித்தரும் வகையில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை அமையப் போகிறது. 2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை? அவர்களுக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்: 

2023 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஜனவரி மாதத்திற்குப் பிறகு உங்கள் நல்ல நேரம் தொடங்கும். மேலும் உங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு பெரிய நன்மைகளைத் தரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உயர் பதவி பெறலாம். மரியாதை அதிகரிக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் எதையும் செய்யாதீர்கள். 

சிம்மம்: 

2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி சனிப்பெயர்ச்சி ஆனவுடன் சிம்ம ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடங்கும். ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். அரசுத் துறை மூலம் ஆதாயம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தேவையற்ற ஆணவத்தைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | இன்னும் 48 மணி நேரத்தில்சூரிய பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு வெற்றி மழை

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு 2023ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். தற்போது வரை முடங்கிய பணிகள் வேகமாக நடக்கும். வாழ்க்கையில் மிக வேகமாக இனிமையான மாற்றங்கள் ஏற்படும். அவற்றைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். பொருளாதார நிலையில் உள்ள பலம் மிகுந்த நிம்மதியைத் தரும். உங்கள் அன்புக்குரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: 

2023 ஆம் ஆண்டு உங்கள் வருமானம் அதிகரிக்கும், ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, நீங்கள் பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும். கவனமாக செலவு செய்ய வேண்டும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தைத் தரும். செயல்களில் வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் பணத்தை நன்றாக நிர்வகிக்க முடியும். இந்த ஆண்டு முதலீட்டுக்கு மிகவும் நல்லது. பங்குச்சந்தையில் அனுகூலம் உண்டாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சி! திருப்பாவை திருவெம்பாவை மணக்கும் மார்கழி மாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News