SANEESWARA Remedies : வாழ்க்கையில் மிகவும் கடினமான காலம் எப்போது என்று கேட்டால், அது ஏழரை சனியின் காலம் என்று அனைவருமே சொல்லிவிட முடியும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும், வீண் செலவுகள் ஏற்படும், கடன் பிரச்சனைகள் மற்றும் திருமணத் தடைகள் ஏற்படும் காலம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் பிரச்சனைகளை உண்டாக்கவே படைக்கப்பட்டவர். அவர், 'ஆயுள்காரகர்' மற்றும் 'ஆரோக்யகாரகர்' என்றும் அழைக்கப்படுகிறார். ஜாதக அடிப்படையில், 'கோசாரம்' மற்றும் 'தசாபுத்தி' அடிப்படையில், சனிபகவான் பலவீனமாக இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.


அதிலும் ஏழரை நாட்டுச் சனியும், அஷ்டமத்தில் சனியும், அர்த்தாஷ்டமத்தில் உள்ள சனியும் துன்பங்களை உண்டாக்கும். இப்படி பல தோஷங்களால் அவதிப்படுபவர்கள், சனி பகவானை சாந்தப்படுத்த கடவுள், கிரகம், சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். சனி பகவானை சாந்தப்படுத்த வழிபாடு செய்ய வேண்டும்.


9 வாரசனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து வந்தால் தோஷம் நீங்கி சுபபலன்கள் கிடைக்கும். சனிபகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை, சனிபகவானைப் போல் கொடுப்பவர்களும் இல்லை என்பது வழக்கு. சனி தோஷ தோஷம் நிவர்த்தி செய்ய இந்த பூஜைகள் அனைத்தையும் செய்பவர்கள் வாழ்வில் சகல நற்பலன்களையும் பெறுவார்கள்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது தனி கவனம் செலுத்துவார் சனி... வாழ்வில் உச்சம் தொடுவார்கள்


சனி பகவான் 2024 ஆம் ஆண்டில், சனி கும்பத்தில் இருக்கும் மற்றும் இந்த ஆண்டு சனி பெயர்ச்சி இல்லை என்றாலும் இந்த ஆண்டு சனீஸ்வரரின் வக்ர பெயர்ச்சி உண்டு. சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். இன்னும் சில நாட்களில் (ஜூன் 30, 2024) வக்ர பெயர்ச்சி அடையும் சனீஸ்வரர், அடுத்த 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார்.


சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இந்த சமயத்தில் சனீஸ்வரரின் கெடுபலன்களை நிவர்த்தி செய்யவும், நல்ல பலன்களையும் அதிகரிக்கவும் என்ன செய்யலாம் என தெரிந்துக் கொள்வோம்.


சனிபகவானுக்கு குருவாக விளங்கும் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது அனைத்து தோஷங்களின் அனைத்து தீய விளைவுகளையும் தடுக்க உதவும். அதேபோல, சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வர சனி தொஷம் நீங்கும்.


மேலும் படிக்க | ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ


சனிக்கிழமையன்று அன்னதானம் செய்து வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகும். சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது, சிவனை வழிபடுவது, சனிக்கிழமைகளில் சுமார் 40 நிமிடங்கள் சிவாலயத்தில் இருப்பது போன்றவை நன்மைகளைத் தரும்.  


சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதுடன், கருங்குவளை என்ற கருநீலப் பூவை சாற்றி வணங்குவதும், சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றுவது, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்வது ஆகியவை நல்ல பலன் தரும். சனிபகவானுக்கு சீரக சாதம், வெல்லம் பொங்கல் வைத்து படைத்து, அந்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்தால் தோஷங்கள் நீங்கும். 


சனி தோஷத்தின் அனைத்து தீமைகளையும் குறைத்து, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வாருங்கள்.  


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஸ்ரீ சக்கரம் வழிபாட்டின் மகத்துவம்! லலிதா திருபுர சுந்தரியை வணங்கும் வழிமுறைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ