Sani Vakra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். கிரகங்களில் அதிக நாட்களுக்கு இவர் இருப்பதால், இவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். அவர் இன்னும் சில நாட்களின், அதாவது, ஜூன் 30, 2024 அன்று அதிகாலை வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். அவர் அடுத்த 139 நாட்களுக்கு வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம் (Taurus):
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாகவும் வலுவாகவும் இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் அமையும். அரசு வேலைகளில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் தனியார் துறை வேலைகளிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வேலையில் உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக துணைபுரியும்.
கடகம் (Cancer):
சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் சிறிய அளவில் செய்யப்படும் கடின உழைப்பால் நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய தொழில்களில் லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவடையும் வாய்ப்புகள் உள்ளன. பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளுக்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடல்நலக் கோளாறுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் (Libra):
துலா ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிறுவனம் நடத்தும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாப வரம்பு அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம் (Capricorn):
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் முறையான முயற்சியால் உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும் வாய்ப்புகள் உள்ளன. சிக்கிய பணமும் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலையில்லாதவர்களும் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் இருப்பதால் உங்கள் வியாபாரம் விரிவடையும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பழைய நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம் (Pisces):
சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடின உழைப்பு குறைவாக இருந்தாலும், அனைத்து வேலைகளிலும் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதால் உங்கள் நிதி நிலை மேம்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெறலாம். நீங்கள் புதிய தொழில்களை தொடங்கலாம், இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ