சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!

சனி வக்ர பெயர்ச்சி 2024: இன்னும் 2 நாளில் ஜூன் 29 அன்று, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. அதோடு, அதே நாளில் புதன் பெயர்ச்சியும் நடைபெறும். இதனால் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜோதிடத்தில் கிரகத்தின் நிலை மற்றும் இயக்கம் மிகவும் முக்கியமானது. கிரகங்களில் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, அஸ்தமனம் உதயம் என, கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றமும் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1 /8

சனி பகவான்: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான், ஜூன் 29 அன்று, கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார். .இதனால், சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள். 

2 /8

சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் புதனின் நிலை காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். எனினும் சில பரிகாரங்கள் மூலம் சனியின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

3 /8

மேஷம்:  மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் சனி மற்றும் புதனின் தாக்கத்தால் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். பணம் சம்பந்தமான எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிப்பது அவசியம்.

4 /8

கடகம்: கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி வரவு செலவுத் திட்டத்தை சரியாக தயாரிக்காதவர்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். எடுக்கும் வேலையில் தடைகள் ஏற்படலாம். இதனால், மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம்.

5 /8

சிம்மம்: சனியும் புதனும் சேர்ந்து சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும், எனவே பணத்தை சேமிக்கவும். தேவையற்ற வாங்குதல்களைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

6 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டும். மன உளைச்சல் இருக்கலாம். பணியிடத்தில் பணிச்சுமையாக உணரலாம். செயல்பாட்டில் தடைகள் இருக்கலாம். தேவையில்லாத விவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

7 /8

சனி பரிகாரங்கள்: ஏழை எளிய மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், பழங்கள், காலணிகள் போன்றவற்றை தானமாக வழங்குவது பலன் தரும். உளுந்து, இரும்பு பொருட்கள், நல்லெண்ணெய் போன்றவற்றையும் தானம் செய்யுங்கள். எறும்புகளுக்கு தேன் மற்றும் சர்க்கரை அளிப்பதும் பலன் தரும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.