சனி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உதயமாக உள்ளது, பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நன்மையையும் தீமையையும் அவரவர் கர்மாவுக்கு ஏற்ப கொடுக்கும் சனீஸ்வரரின் உதயம் அனைவருக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவகிரகமான சனீஸ்வரர், சிலருக்கு கருணை காட்டுவார், அவர்களின் வீட்டு பணப்பெட்டியை நிரப்புவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதம் முதல் ரிஷபம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சாதகமான பலன்களை வழங்குவார். சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு நபர் மீது சனியின் அருட் பார்வை விழும்போது, ​​​​வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணும் ஒருவருக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குக்ம்.


நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனியின் அருளால் தான் ஒருவருக்கு வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும். 2024ல் கும்ப ராசியில் தனது சஞ்சாரத்தை மாற்றுவார். 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் சனி கிரகம் வந்தபிறகு, மார்ச் மாதம் உதயமாகும்.


சனி உதயம், 3 ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் . சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இன்று முதல் அற்புதமான ராஜயோகம், வெற்றிகள் குவியும்


ரிஷபம்


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு சனிபகவானின் உதயத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும். பதவி உயர்வும் வருமானமும் கைகூடும். தொழில் செய்பவர்களுக்கும் மங்களகரமானதாக இருக்கும் சனியின் உதயம் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வேலை மற்றும் அரசியலில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் இந்த நேரத்தில் அரச மகிழ்ச்சியைப் பெறுவார்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.


துலாம்


சனியின் உதயத்தால், துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த மக்களின் வாழ்க்கையில் சாதகமான விளைவுகள் காணப்படும். இதுமட்டுமின்றி, வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் நல்ல பலனைத் தரும். வருமானம் அதிகரிப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். மகிழ்ச்சிக்கான வழிகள் அதிகரிக்கும், சொல்லப்போனால் வாழ்வின் வசந்த காலம் இது என்று சொல்லலாம்.


மேலும் படிக்க | நவம்பர் மாத பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட ராசிகளும்... முழு விபரம்..!!


தனுசு ராசி (Sagittarius)


தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வழங்கும் சனியின் உச்சம் காரணமாக, தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சனியின் உதயம் வேலையில்லாத இளைஞர்களுக்கு நற்பலன்களை வழங்கும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்பும் வரலாம். இக்காலத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருகும். இந்த நேரம் வணிக வகுப்பினருக்கும் சாதகமாக இருக்கும். சனியின் அருளால் நிதி வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். திருமணக் கனவுகள் ஈடேறும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜூ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிரகங்கள் நீச்சமடைந்ததால் உருவான ராஜயோகம்! 500 ஆண்டுகளுக்கு பிறகு அட்டகாசமான யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ