நீச்சபங்க ராஜயோகம்: ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. அக்டோபர் 18, 2023 அன்று, சூரியன் துலாம் ராசிக்கு மாறியது, பின்னர் நவம்பர் 3, 2023 அன்று, சுக்கிரன் கன்னிக்கு மாறினார். சூரியன் துலாம் ராசியிலும், சுக்கிரன் கன்னி ராசியிலும் பலவீனமாக உள்ளனர். இது, சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்கியது.
ஒருவரின் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக் கிரகங்கள் வலிமை அடைந்தும், தீங்கு செய்யக்கூடிய பகைக் கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால், அனைத்துச் செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம். கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலுவிழந்து இருக்கிறதா என்பதை அந்த கிரகம் இருக்கும் வீட்டின் நிலையே முடிவு செய்கிறது.
ஒரு கிரகம் நீச்சம் பெற்றால் அந்த கிரகம் சம்பந்தமான எந்த விஷயமும் முழுமையாக கிடைக்காது. விதி என்று இருந்தால், விதிவிலக்கு என்பதும் உண்டு. நீச்சமடைந்த ஒரு கிரகம் நீச்ச பங்கம் பெறும் பொழுது இழந்த தன் வலுவை திரும்பப் பெறுகிறது. அது நீச்சபங்க ராஜயோகம் (Neecha Panga Raja Yogam) என்று அழைக்கப்படுகிறது.
நீச்சபங்க ராஜயோகம் என்பது என்ன? அதை எப்படி கணக்கிடுவது?
நீச்ச கிரகம் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெறுவது
நீச்சக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது
நீச்சன் வர்க்கோத்தமம் பெறுவது
நீச்சம் பெற்றா கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இணைவது
கிரகம் லக்னம் அல்லது கேந்திரத்தில் இருப்பது
கிரகம் வீடு கொடுத்தவன் கேந்திரத்தில் இருப்பது
நீச்சனின் ராசி அதிபதி பரிவர்த்தனை ஆவது
நீச்சனை இன்னொரு நீசக்கிரகம் பார்ப்பது
நீச்ச கிரகம் வக்ர கதியில் இயங்குவது
ஜோதிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் அதிர்ஷ்டத்தை அதிகரித்து பணக்காரராக்கும். தற்போது, 500 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன்-சுக்கிரன் இணைந்து உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம் அனைவரின் வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தும் என்றாலும் 4 ராசிக்காரர்களின் வருமானத்தை சட்டென்று அதிகரிப்பார்.
மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம், இது அவர்களின் நிதி நிலைமையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வருமானத்தில் உயர்வு கூடும். பெரியோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசி கிடைக்கும். கடினமான வேலைகளும் சுலபமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் சாதகமாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வசதிகளும் நிம்மதியும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் சுப பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் முடிவடையும். தடைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ஆசைகள் எல்லாம் எதிர்பாராத வகையில் நிறைவேறும். நிலம் மற்றும் வாகனம் லாபத்தைக் கொடுக்கும். தொழிலை விரிவுபடுத்த நல்ல நேரம். நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ