சனீஸ்வரரின்ன் வக்ர பெயர்ச்சி பலருக்கு நல்ல பலனைக் கொடுத்தாலும் சிலருக்கு வக்ரமான துன்பத்தையே கொடுக்கிறது. சனீஸ்வரர் துன்பத்தைக் கொடுத்தாலும் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு அவரது பலன்கள் மாறுபடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனீஸ்வரர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கிறார். அவற்றை, கர்ம சனி, பாக்கிய சனி, அஷ்டம சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ரோக சனி, பஞ்சம சனி, அர்த்தாஷ்டம சனி , சகாய சனி, பாத சனி , ஜென்ம சனி , விரய சனி, லாப சனி என பலவிதமாக வகைப்படுத்தலாம்.


கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதையே நாம் கிரக பெயர்ச்சி என்கிறோம். சில கிரகங்கள் சில நேரங்களின் பின்னோக்கி நகர்கின்றன. அப்படி கிரகத்தின் பின்னோக்கிய நகர்வை வக்ர நகர்வு என்கிறோம்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2022: மேஷத்தில் பெயர்ச்சி; யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் 


சனி கிரகத்தின் பின்னோக்கிய நகர்வையே சனி வக்ர நிலை என்று அழைக்கிறோம். தற்போது சஞ்சரிக்கும் ராசியிலேயே பின்னோக்கி நகவ்வதையும் சனி வக்ரம் என்கிறோம். அதேபோல, தற்போதிருக்குக்ம் ராசிக்கு அடுத்த ராசிக்கு செல்லாமல் ராசியைத் தாண்டி செல்வதையும் வக்ர பெயர்ச்சி என்கிறோம்.


சனிபகவான் ஜூன் ஐந்தாம் தேதி முதல் கும்ப ராசியில் வக்ரமாக சஞ்சரிக்கிறார், இதனால் நான்கு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்கு இறுதியில் பணத்தை வாரி வழங்கிச் செல்வார் சனி பகவான்.


நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனீஸ்வரரின் கோபத்தால் ஒரேயடியாக பாதிக்கப்பட்டாலும் அவர் நீதிதேவன் என்பதால் நன்மைகளுக்கு ஏற்ற நல்ல பலன்களையும் கொடுப்பார்.  


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்வதும், எள்ளெண்ணெய் தீபம் இடுவதும் சனி பகவான் கொடுக்கும் தீமையான பலன்களை குறைக்கும். அதிலும் கும்பம், கடகம், மீனம், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பாக எள்ளெண்ணெய் தீபம் இட்டு, சனீஸ்வரரை வணங்குவது நல்லது.


இந்த ராசிக்காரர்களுக்கு வக்ர பெயர்ச்சியில் பணம் சம்பந்தமான விஷயங்களில் சிக்கலை உண்டாக்கினாலும், செல்லும்போது, பணப்பிரச்சனைகளை போக்கிவிட்டு போவார் சனீஸ்வரர்.


சனிக்கிழமையன்று பொருட்களை தானம் செய்வது நல்லது. அதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, உணவிடுவதும் நல்லது. 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி சிறப்பாக இருக்கும்


மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர சஞ்சாரத்தால் வேலை சம்பந்தமான பிரச்சனைகளும் பணச் சிக்கல்கலும் ஏற்படும். அவர்கள், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிப்பதுடன், சனீஸ்வரருக்கு பிடித்த கருப்பு நிற ஆடையை சனிக்கிழமையன்று அணிவது நல்ல பலன் கொடுக்கும்.


சனி தேவரின் பிற்போக்கு சஞ்சாரத்தால் விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சிக்கல் ஏற்படலாம் கோபத்தைக் கட்டுப்படுத்துவதும், பணப் பிரச்சனைகள் தொடர்பாக வாழ்க்கைத்துணையின் முடிவை ஏற்றுக்கொள்வதும் நல்லது.  


தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டியது வாழ்க்கைக்கு நல்லது என்பதை மகர ராசிக்காரர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் தொழில் பாதிக்கப்படும். எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அமைதி காப்பது நல்லது. சனிக்கிழமைகளில் அன்னதானமும், வஸ்திர தானமும் செய்வது சிக்கல்களை சீர்செய்யும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR