ஆகஸ்ட் 26 அன்று செவ்வாய் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்குள் நுழைவதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட பலன்களைப் பெறுவார்கள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதில், செவ்வாய் கிரகமானது, மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாகும். செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 26ஆம் தேதி மிதுன ராசியில் பிரவேசிப்பது மிகவும் விசேஷமானது. அன்று தான் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.


செவ்வாய், மிதுனத்திற்குள் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது, சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைக் கொடுத்தாலும் பலர் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.  ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் வெற்றி வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும். 


மேலும் படிக்க | ராகு சனி & சூரியன் மூன்று கிரகங்களும் சேர்ந்து 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்கும்!


கடக ராசிக்கு மிதுன செவ்வாய் என்ன செய்வார்?


 இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல, வேலை செய்யும் இடத்தில் கவனமாக இல்லாவிட்டால், கெட்ட பெயர் வந்துவிடும். கவனமாக கையாளவும். செவ்வாய் மிதுனத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் அலைச்சலும் அதிகரிக்கும்.  


விருச்சிக ராசிக்கு மிதுன செவ்வாய் என்ன செய்வார்?


விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிதுனத்தில் இருக்கும் செவ்வாய் மரியாதைக் குறைவை ஏற்படுத்துவார். அரசியலில் இருப்பவர்களுக்கு இது கவலை தரும் காலமாக இருக்கும். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம். பிள்ளைகள் வழியில் கவலைகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஆவணி மாதத்தில் புனித சடங்குகள்! பூணூல்...ராக்கி... சம்பிரதாயமும் சகோதர பாசமும்!


தனுசு ராசிக்காரர்களுக்கு மிதுன செவ்வாய் பாதிப்பு என்ன?


மிதுனத்தில் செவ்வாய் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு பாதகமாக அமையும் இந்த நேரத்தில் தன்னம்பிக்கை, ஆற்றல் மற்றும் தைரியம் குறையும். சகோதர சகோதரிகளுடனான உறவுகளில் சுணக்கம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படலாம். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் செலவை அதிகரிக்கும், வீண் செலவுகளை தவிர்க்க முடியாது.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ