ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!

Pradosham Worship : பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் தான் வரும். ஆனால் குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்த அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2024, 05:47 PM IST
  • ஒரே மாதத்தில் 3 பிரதோஷங்கள்!
  • மூன்றிலும் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது!
  • 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வு
ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு! title=

குரோதி ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், ஆன்மீக நோக்கில் ஒரே மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருவது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நாளன்றே (01.08.2024) வியாழக்கிழமையன்று வந்த குருவார பிரதோஷம், முதலாவதாகவும், இன்று (17.8.2024) ஆவணி மாதம் சனிப்பிரதோஷம் ஆகவும், மூன்றாவதாக இந்த மாதத்தில் கடைசி நாளான 31.8.2024 அன்று பிரதோஷமும் வருகின்றன.

ஆவணி சனி மஹா பிரதோஷம் 
பிரதோஷம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தான், இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வு ஆகும். தொடர்ந்து இந்த மூன்று பிரதோஷங்களிலும் சிவ வழிபாடு செய்தால் மறுபிறவி கிடையாது என்ற நம்பிக்கை உண்டு. அதிலும், சனி மகாபிரதோஷ நாளில் வழிபட்டால் வக்ர சனியின் தொல்லைகள் தீரும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு திதிக்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில், திரயோதசி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. திரயோதசி திதி நாளன்று பிரதோஷ வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும், திரயோதசி திதியின் பிரதோஷ வேளை (மாலை 4.30 - 6.00) மிகவும் சக்தி வாய்ந்தது. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களில் வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் தொலைந்து போகும்.

அதிலும் சனிக்கிழமைகளில் பிரதோஷ விரதம் வந்தால் அது மிகவும் சிறப்பானது. அதை சனி மகாபிரதோஷம் என்று கூறுவார்கள். அதாவது பிரதோஷங்களுக்கு எல்லாம் தலையாய பிரதோஷம் அது என்று பொருள். இந்த நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை அகற்றி பிறவியறுக்கும்..

சனிக்கிழமை வழிபாடு

பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரிய நாளாகும். சனிக்கிழமை நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும். சனிபகவான், நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்திராஷ்டம சனியால் பீடிக்கப்பட்டவர்களை அதிக அளவில் பாதிப்பார்.

மேலும் படிக்க | சிம்மத்தில் சுக்கிரனுடன் இணையும் சூரியன்! நாளை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பணமழை பொழியும்!

வக்ர சனி பாதிப்பு

சனி வக்ர கதியில் இயங்கும் காலத்தில் சனியின் பாதிப்பும், அதன் தாக்கமும் மாறுபடும். ஆனால், எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது முறைப்படி வழிபாடு செய்வது நல்லது. சனி பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவதால், ஒரு ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

காரியத்தடை, சுபகாரியங்களில் தடங்கல்கள், குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் கஷ்டப்படுபவர்கள் சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்தால் நிவாரணம் கிடைக்கும். பிரதோஷ நாளன்று மாலை பிரதோஷவேளையில் சிவன், பார்வதி நந்தி தேவருக்கு செய்யப்படும் அபிஷேகத்தை கண்டு வழிபட்டாலும், சிவபுராண பாராயணம் செய்வதும் துன்பம் தீர்க்கும்.

நந்தி வழிபாடு
சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானின் தொல்லைகள் தீரும். சிவபெருமான் நந்திக்கு சிவ ரகசியங்களை உபதேசம் செய்தார். நந்தியே, தான் கேட்டறிந்த சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார் என்பதால், இந்த உலகத்தில் முக்தி அடைய விரும்புபவர்கள் நந்தியை வழிபடலாம். அதிலும், பிரதோஷ வேளையில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதால் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் நம் அனைவரின் பிறப்பையும் வேரறுப்பார்.

நந்திக்கு பாலாபிஷேகம்

சனிப்பிரதோஷ நாளில் நந்தி அபிஷேகத்துக்குப் பசும்பால் வாங்கித் தந்து, அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. நந்திக்குப் பஞ்சாமிருதம் செய்யப் பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நம் வறுமை நீங்கி செல்வ வளம் சேரும். வில்வ இலைகளை நந்திக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால், நந்தி வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேற அருள்புரிவார்.

மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News