ஆவணி மாதத்தில் புனித சடங்குகள்! பூணூல்...ராக்கி... சம்பிரதாயமும் சகோதர பாசமும்!

Avani Avittam 2024: வேதம் கற்பவர்களுக்கு மிக முக்கியமான நாளான ஆவணி அவிட்டம் ஆகஸ்டு 19ம் தேதி சந்திரனுக்கு உரிய  திங்கட்கிழமையன்று வருகிறது. ரிக், யஜூர் வேதங்கள் கற்பவர்கள் ஆவணி அவிட்ட நாளன்று வேதம் கற்க துவங்குவார்கள். வேதங்கள் அவதரித்த நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுவதால் வேதங்களை போற்றி வணங்கும் நாளாகவும் பூஜிக்கப்படுகிறது

ஆவணி அவிட்டம் (19.08.2024)  பூணூல் மாற்றுவதற்கு ஏற்ற நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

1 /9

ரிக், யஜூர் வேதம் பயின்ற வேதியர்கள் பூணூல் மாற்றும் நாள் ஆவணி அவிட்டம் ஆகும். வேதங்களை வழிபடுவதற்குரிய ஆவணி அவிட்டத்தன்று செய்யப்படும் சடங்குகளின் முக்கியத்துவத்தைத் தெரிந்துக் கொள்வோம்...  

2 /9

ஆவணி அவிட்டம் பிராமண சமுதாயத்தினர், தங்களுடைய பூணூல் மாற்றிக் கொள்ளுவம் நாளாகும். ஆவணி மாதத்தில் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும். அந்த நாளையே ஆவணி அவிட்டமாக அனுசரிக்கிறோம்

3 /9

வேதங்கள் அவதரித்த நாள் என்றும், ஆவணி அவிட்ட நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது

4 /9

ஆவணி அவிட்டம் அன்று கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ பிராமணர்கள் ஒரு குழுவாக கூடி, மந்திரம் சொல்லி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.

5 /9

பூணூல் மாற்றும் சடங்கிற்கு பிறகு, புதிதாக வேதங்கள் கற்க துவங்குபவார்கள். இதற்கு உபகர்மா என்று பெயர்

6 /9

சூரிய பகவான், சிம்ம ராசியில் பயணிக்கும் ஆவணி மாதத்தில் ரிக், யஜூர் வேதங்கள் தோன்றியதாக நம்பிக்கை. இந்த வேதங்களை கற்றவர்கள், அவற்றை மரியாதை செய்யும் வகையில் ஒன்றாக கூடி, பூணூல் மாற்றிக் கொண்டு வேதங்களை ஓதுகின்றனர்  

7 /9

ஆவணி அவிட்ட நாளன்று, பாயாசம், போளி, பச்சடி, பொரியல், கொசுமல்லி, பருப்பு வடை, அப்பளம் என வழக்கமான பண்டிகை நாள் உணவு மற்றும் தயிர் சாதம் ஊறுகாய் உண்பது வழக்கம்

8 /9

சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை வலியுறுத்தும் நாளாக ஆவணி அவிட்டத்தை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்

9 /9

என்றென்றும் உங்களை நாங்கள் காப்போம் என சகோதரர்கள், தங்கள் சகோதரிகளுக்கு உறுதி கொடுக்கும் நாளான ரக்‌ஷா பந்தன் நாளன்று, சகோதரிகள் சகோதரர்களின் கையில் ராக்கிக் கயிற்றைக் கட்டுவார்கள். சகோதரர்கள், தங்கள் சகோதரிகளுக்கு பரிசு வழங்குவார்கள்